சார்லஸ் - டயானா : 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கை ஏலம் விட முடிவு!

திருமணத்தின்போது தயாரிக்கப்பட்ட கேக்கின் ஒரு பகுதியை பாதுகாத்து வைத்து தற்போது 41 ஆண்டுகள் கழித்து அதை ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 41-year-old cake from King Charles and Princess Diana's wedding to be auctioned
41-year-old cake from King Charles and Princess Diana's wedding to be auctionedTwitter
Published on

பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பிப்ரவரி 6 தேதி 1981ல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார்.

பிப்ரவரி 24 தேதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பின்னர் 1981, ஜூலை, 29 தேதி டயானாவுக்கும், இளவரசர் சார்லஸ்க்கும் புனித பால் தேவலயத்தில் திருமணம் நடந்தது.

இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலமாகவும் , 60 லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டனர். எனினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Tim Graham

சட்டப்படி விவாகரத்து பெற்றவர்களாக ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பிரிந்தனர்.

இந்த நிலையில் திருமணத்தின்போது தயாரிக்கப்பட்ட திருமண கேக்கின் ஒரு பகுதியை பாதுகாத்து வைத்து தற்போது 41 ஆண்டுகள் கழித்து அதை ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேக் துண்டின் ஏல மதிப்பு 300 இங்கிலாந்து பவுண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

 41-year-old cake from King Charles and Princess Diana's wedding to be auctioned
பின்லேடன் இடமிருந்து பணம் பெற்றாரா பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ? - வெடிக்கும் சர்ச்சை
Oli Scarff

ஆனால், அதை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்காக 23 கேக்குகள் அப்போது தயாரிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்ற மற்றொரு கேக் துண்டு 2014-ம் ஆண்டில் 1,375 இங்கிலாந்து பவுண்டு மதிப்புக்கு, இந்திய மதிப்பில் ரூ.1.27 லட்சம் (தற்போதுள்ள மதிப்பு) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

 41-year-old cake from King Charles and Princess Diana's wedding to be auctioned
மரணத்தின் விளிம்பில் சார்லஸ்? எலிசபெத் மறைவை கணித்தவரின் பகீர் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com