மரணத்தின் விளிம்பில் சார்லஸ்? எலிசபெத் மறைவை கணித்தவரின் பகீர் தகவல்

தற்போது புதிய மன்னராகப் பதவி ஏற்றிருக்கும் சார்லஸ் 2026 மார்ச் 28ஆம் தேதி இறந்து விடுவார் என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
king charles II
king charles IITwitter
Published on

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் செப்டம்பர் 8 தேதி உயிரிழப்பார் என முன்கூட்டியே டிவிட்டரில் தெரிவித்திருந்த பயனர் ஒருவர் தற்போது புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பு குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8 தேதி காலமானார். பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகள் ஆட்சி செய்து அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத் தான்.

மகாராணி எலிசபெத்தின் மறைவிற்கு இங்கிலாந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பொது மக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்
பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்NewsSense

ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

இதற்கிடையில் லோகன் ஸ்மித் என்ற டிவிட்டர் பயனாளர் ஒருவர் “ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார்” என்று ஒரு ட்வீட் செய்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

king charles II
Queen Elizabeth : 36 ஆண்டு பழமையான மகாராணி எழுதிய கடிதம் - 2085 வரை ரகசியம் காக்க உத்தரவு

லோகன் அவரது டிவிட்டர் பதிவைப் போலவே இங்கிலாந்து மகாராணி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து லோகன் தற்போது மற்றொரு பதிவைத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் தற்போது புதிய மன்னராகப் பதவி ஏற்றி இருக்கும் சார்லஸ் 2026 மார்ச் 28ஆம் தேதி இறந்து விடுவார் என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் "அரசர் மூன்றாம் சார்லஸ் குறுகிய காலத்திற்கு மட்டுமே அரசராக இருப்பார்” என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்திருக்கிறார். அவருக்கு பதிலாக இளவரசர் ஹாரி அரசாக நியமிக்கப்படுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

king charles II
Queen Elizabeth II: இனி இங்கிலாந்து பாஸ்போர்ட் செல்லாதா? ராணியின் மறைவால் குழப்பம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com