new zealand
new zealandCanva

இந்தியர்களுக்கு எளிதான குடியுரிமையை வழங்கும் 5 நாடுகள் பற்றி தெரியுமா?

சில நாடுகள் இந்தியர்களுக்கு எளிதான குடியுரிமையை வழங்கியும் வருகின்றன. அப்படி இருக்கும் நாடுகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
Published on

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் செழித்து வரும் தொழில்முனைவோர் காரணமாக வெளிநாடுகளில் குடியேற மக்கள் விரும்பப்படுகின்றனர். மோர்கன் ஸ்டான்லியின் சமீபத்திய அறிக்கை, 2014 மற்றும் 2018 க்கு இடையில் மட்டும் 23,000 க்கும் மேற்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் குடியுரிமைத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சில நாடுகள் இந்தியர்களுக்கு எளிதான குடியுரிமையை வழங்கியும் வருகின்றன. அப்படி இருக்கும் நாடுகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா

பன்முக கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலியா, தொடர்ந்து சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மாணவர்கள், தற்காலிக பணியாளர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விருப்பங்களை வழங்குவதன் மூலம் நாடு பல்வேறு மக்களை கவர்ந்து வருகிறது.

சர்வதேச மாணவர்கள், குறிப்பாக படிப்புக்காக வரும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. குடியுரிமைக்கான வசதிகளையும் மேலும் எளிதாக்குகிறது.

சிங்கப்பூர்

உலகளாவிய நிதி மையமாகவும், மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவும் புகழ் பெற்ற சிங்கப்பூர் மற்றொரு விரும்பத்தக்க இடமாகும்.

கனடா

கனடா பன்முக கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குடிமக்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக அரவணைத்து வருகிறது. 2024க்குள் ஒரு மில்லியன் குடியேறியவர்களை கனடா அனுமதிக்கும் என கூறப்படுகிறது.

ஜெர்மனி

ஜெர்மனி, அதன் வாகனத் தொழில் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன், ஒரு கவர்ச்சிகரமான நாடாக உருவெடுத்துள்ளது. நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கைகள் மற்றும் பணி விசாக்கள், வேலை தேடுதல் விசாக்கள், மாணவர் விசாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசா விருப்பங்களை எளிதாக்குகின்றன.

நியூசிலாந்து

இறுதியாக, நியூசிலாந்து, அதன் அழகிய நிலப்பரப்புகளுக்கும் துடிப்பான கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான இடமாக மாறியுள்ளது. மாணவர் விசா, பணி விசா மற்றும் குடியுரிமை விசா உள்ளிட்ட பல்வேறு வகையான குடியேற்ற விசாக்களை நாடு வழங்கி வருகிறது.

new zealand
இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com