நாம மீனை சாப்பிடுவோம், ஆனா நம்மளேயே சாப்பிடுற மீன்கள் பற்றி தெரியுமா?

உலகின் பல்வேறு நீர்நிலைகளில் காணப்படும் சில கொடிய மீன்கள், அவற்றின் பண்புகள், வாழ்விடங்கள் குறித்து இங்கே காணலாம்.
Piranha
PiranhaTwitter
Published on

பெருங்கடலில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. ஆழ்கடலில் என்ன வகையான அல்லது எத்தனை பயங்கரமான உயிரினங்கள் பதுங்கியிருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.

கண்டுபிடிக்கப்பட்ட வரை சில கடல்வாழ் உயிரினங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானவையாக இருக்கின்றன.

பல கொடிய மீன்கள் நீருக்கடியில் வாழ்கின்றன. அவை நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

அப்படி உலகின் பல்வேறு நீர்நிலைகளில் காணப்படும் சில கொடிய மீன்கள், அவற்றின் பண்புகள், வாழ்விடங்கள் குறித்து இங்கே காணலாம்.

பெரிய வெள்ளை சுறா

பெரிய வெள்ளை சுறாக்கள் உலகின் மிகவும் ஆபத்தான சுறாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை மற்ற மீன்களை விட அளவில் பெரியவை, அதன் சக்திவாய்ந்த தாடைகள் மற்றும் கூர்மையான பற்களுக்கு பெயர் பெற்றவை.

இவை டால்பின்கள் மற்றும் சிறிய திமிங்கலங்களை தாக்கி கொல்லும் திறன் கொண்டவை.

இந்த வெள்ளை சுறாக்கள் மனிதர்களை அவ்வளவாக கொன்றதில்லை என்றாலும், கொல்லும் திறனை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக "ஹாட் ஸ்பாட்கள்" என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம். அங்கு சுறாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பிரன்ஹா

பிரன்ஹாஸ் என்பது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நன்னீர் மீன் வகையாகும்.

அவற்றின் கூர்மையான பற்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடத்தைக்காக அறியப்படுகின்றன. அவை பொதுவாக ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுகின்றன.

பிரன்ஹாக்கள் ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகள் உட்பட பலவகையான இரையை உண்ணும். அவை இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை உண்பதாகவும் கூறப்படுகிறது.

மனிதர்கள் மீதான தாக்குதல்கள் அரிதானவை என்றாலும் வறட்சி அல்லது குறைந்த நீர் நிலைகளின் போது அவை மிகவும் ஆக்ரோஷமாக மாறக்கூடும்.

எலெட்ரிக் ஈல்

எலக்ட்ரிக் ஈல் (Electric Eel) என்பது தென் அமெரிக்காவின் நதிகளை தாயகமாகக் கொண்ட மீன் வகை. அவை சக்திவாய்ந்த மின்சார அதிர்ச்சிகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன.

எலெக்ட்ரிக் ஈல் 8 அடி நீளம் வரை வளரக்கூடியது மற்றும் 600 வோல்ட் வரை அதிர்வை உண்டாக்கும்.

அவை மாமிச உண்ணிகள், ஓட்டுமீன்கள் உள்ளிட்டவைகளை இரையாக உண்கின்றன. எலக்ட்ரிக் ஈல்ஸ் எலக்ட்ரோசைட்களால் ஆன ஒரு சிறப்பு உறுப்பைக் கொண்டுள்ளது. இரையை கண்டுபிடிக்க, வேட்டையாட இந்த உறுப்பைப் பயன்படுத்துகிறது.

இந்த மின்சார அதிர்வை உண்டாக்கக்கூடிய மீன்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று கருதப்படவில்லை என்றாலும், அவற்றின் அதிர்வு மனிதர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

Piranha
ஆஸ்திரேலியா : பண்டைய மொழியை வடிவமைத்த சுறா மீன்கள் - ஓர் ஆச்சரிய வரலாறு

ஸ்டோன்ஃபிஷ்

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கடலோர நீரில், குறிப்பாக பவளக் கடலில் காணப்படும் விஷ மீன் தான் இந்த ஸ்டோன்ஃபிஷ். அவைகள் தங்களை மறைத்துக்கொள்ளும் திறனுக்காக அறியப்படுகிறது.

ஸ்டோன்ஃபிஷ்கள் முதுகுத் துடுப்பில் உள்ள விஷதன்மைக்காக பெயர் பெற்றவை.

அவற்றின் விஷம் இதயம், தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

பாக்ஸ் ஜெல்லி மீன்

இது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கடலோர நீரில் காணப்படும் ஒரு வகை ஜெல்லிமீன் ஆகும்.

கடுமையான வலியையும் மரணத்தையும் கூட ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள தன்மைக்காக இவை அறியப்படுகின்றன.

பாக்ஸ் ஜெல்லி மீன்களால் உயிரிழப்பது அரிதானது என்றாலும், இது உலகின் மிகவும் விஷமுள்ள விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Piranha
ஜப்பான்: 70 ஆண்டுகள் வாழும்; கோடிக்கணக்கில் விலை- 'கொய் மீன்கள்' புனிதமா கருதப்படுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com