வழக்கமாக எல்லோரும் செல்லும் அதே வெர்ல்ட் டூர், பைக் ரைட், அட்வெஞ்சர் ட்ரிப்புக்கு போக வேண்டாம் என நினைப்பவரா நீங்கள்?
எனில் இந்த பதிவு உங்களுக்கானது. வித்தியாசமான, விநோதமான இடங்களின் தொகுப்பு. வளைந்த வீடு, பப்பிள் கம் தெரு என இந்த பதிவில் நாம் எதிர்பார்க்காத இடங்கள் உள்ளன.
தவறாமல் இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்!
இதன் உண்மையான பெயர் டர்வாஜா கேஸ் கிரேட்டர். இயற்கை எரிவாயு நிலமான இது கிட்ட தட்ட 52 ஆண்டுகளாக - 1971 முதல் எரிந்துகொண்டே இருக்கிறது. இந்த இடத்தை பார்க்க இரவு நேரம் சிறந்தது. நரகத்தின் வாசல் அழைக்கப்படும் இந்த இடம் துர்க்மெனிஸ்தானில் அமைந்துள்ளது
வடக்கு லிதுவேனியாவில் அமைந்துள்ள இவ்விடம் உலகின் பிரபலமான புனித தலங்களில் ஒன்று. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, தங்கள் நம்பிக்கையின் அடையாளமாக சிலுவைகளை விட்டுச் செல்கின்றனர்.
இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சிலுவைகள் உள்ளன
வளைந்த வீடுகள் தெரியும், அதென்ன வளைந்த காடு?
இந்த காட்டிலுள்ள மரங்கள் வளைந்திருக்கும். போலந்தில் அமைந்துள்ள இக்காட்டில் வளரும் பைன் மரங்கள், ஒரு தனித்துவமான, வளைந்த வடிவத்தைக் கொண்டுள்ளன.
வழக்கமாக நம் ஊர்களில் வேரிலிருந்து நீராக மேலே வளரும் மரங்களை போல அல்லாமல், தரையிலிருந்து சற்றே நெளிந்து செல்கிறது தண்டு. இங்குள்ள சுமார் 100 மரங்களும் இப்படி தான் இருக்கின்றன
இந்த வீடு பல மர்மங்கள் நிறைந்தது. கிட்ட தட்ட 38 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது இந்த வீடு.
இந்த வீட்டின் உரிமையாளரான சாரா வின்செஸ்டர், வீட்டில் இருக்கும் ஆவிகளை குழப்புவதற்காக கட்டியுள்ளார்.
இந்த வீட்டில் மொத்தம் 160 அறைகள், 2,000 கதவுகள், 10,000 ஜன்னல்கள், 47 படிக்கட்டுகள், 47 நெருப்பிடங்கள், 13 குளியலறைகள் மற்றும் 6 சமையலறைகள் உள்ளன. வீட்டிலிருக்கும் பேய்கள் இதனால் கன்ஃபியூஸ் ஆகும் என்ற நம்பிக்கை
இங்கிலாந்தின் நார்தம்பர்லாந்திலுள்ள ஆன்விக் கோட்டையில் அமைந்திருக்கிறது இந்த பாய்சன் கார்டன். இங்கு ஆளையே கொல்லக் கூடிய விஷத் தன்மை நிறைந்த செடி கொடிகள் உள்ளன. இதனால் இங்கு செல்ல சிறப்பு அனுமதி தேவை. அப்படியே சென்றாலும் மிக மிக ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.
தேவாலயம் என்பது புனிதத் தலம். மன அமைதிக்காக கடவுளை பிரார்த்திக்க செல்லும் இடம். ஆனால் இந்த இடமே அமைதியற்ற ஒரு சூழலை உருவாக்கும் என்றால்?
செக் நாட்டில் அமைந்துள்ள இந்த போன் சர்ச் அப்படியான ஓரிடம் தான். இங்கு சுமார் 40,000 முதல் 70,000 வரையான ஆட்களின் எலும்புக்கூடுகள் கொண்டு கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
கொஞ்சம் அருவருப்பான விஷயம் தான் என்றாலும் இது ஒரு ஃபேம்ஸ் ஆன டூரிஸ்ட் ஸ்பாட். இங்கு செல்பவர்கள் தங்கள் வாயில் போட்டு மென்ற பப்புள் கம்மை அருகில் இருக்கும் சுவற்றின் மீது ஒட்டிவிடலாம்.
இப்படி ஒட்டப்பட்ட பல பப்புள் கம்களை இங்கு காணலாம். 1950 ஆம் ஆண்டில் இரண்டு பள்ளிகளின் மாணவர்கள் அவர்களுக்குள் இருந்த போட்டியின் காரணமாக இப்படி பப்புள் கம்களை சுவற்றில் ஒட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் இந்த வழக்கம் தொடர்ந்தும் வருகிறது
அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த மியூசியத்தில், உலகின் மிக மோசமான ஓவியங்கள் எனக் கருதப்படும் பெயின்ட்டிங்குகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
மியூசியம் ஆஃப் பிரோக்கன் ரிலேஷன்ஷிப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இடம் குரோஷியாவில் அமைந்துள்ளது. இங்கு பிரிந்த, முறிந்த அல்லது தோல்வியுற்ற காதல்களில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் அளித்த பரிசுப் பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
மனதை திடப்படுத்திக்கொண்டு இங்கு செல்லுங்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust