Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!

கால்பந்து வீரர் மரடோனாவுக்காக 1998ல் கோவிலே கட்டப்பட்டது. இது நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டுவது போன்றதில்லை. ஏனெனில் இந்த மதத்தில் 55 நாடுகளைச் சேர்ந்த 80,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!
Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!Twitter

மரடோனா, மெஸ்ஸி போன்ற கால்பந்து விளையாட்டுகள், கம்யூனிசம், மாட்டுக்கறி போன்றவை தான் அர்ஜென்டீனா பற்றிய நம் பார்வைகள் ஆனால் அந்த நாட்டுக்குள் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் ஒழிந்திருக்கின்றன.

அர்ஜென்டீனா பற்றிய வினோதமான 5 தகவல்களைப் பார்க்கலாம்.

மரடோனா மதம்

அர்ஜன்டினா நாட்டுக்காக உலகக் கோப்பை வென்று கொடுத்தவர் கால்பந்து வீரர் மரடோனா.

இவரது தீவிர ரசிகர்கள் இவரது பெயரில் ஒரு மதத்தையே உருவாக்கியிருக்கின்றனர் என்பது நம்பமுடியாததாக இருக்கலாம்.

இந்த மதத்துக்காக 1998ல் கோவிலே கட்டப்பட்டது.

இது நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டுவது போன்றதில்லை. ஏனெனில் இந்த மதத்தில் 55 நாடுகளைச் சேர்ந்த 80,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இவர்களுக்கு என்று தனியான கட்டளைக் கொண்டுள்ளனர். அதன் படி, இவர்கள் தங்கள் மகனுக்கு மரடோனாவின் முதல் பெயரான டீகோ என்பதையே சூட்டுகின்றனர்.

அர்ஜென்டீனாக்காரர்களின் கால்பந்து வெறியை இந்த விஷயத்தின் மூலம் அறியமுடிகிறது.

தாமதமாக உணவருந்துவார்கள்

நம் வாழ்க்கை முறை முற்றிலும் கட்டுப்பாடற்ற ஒன்றாக மாறிவிட்டதனால் நாம் இஷ்டத்துக்கு சாப்பிட்டுத் தூங்குகிறோம்.

ஆனால் கலாச்சார முறைப்படியே அர்ஜென்டீனா மக்கள் மிகவும் தாமதமாக உணவருந்தக் கூடியவர்கள்.

மதிய உணவை 2 மணிக்குப் பிறகும் இரவு உணவை 9 மணி முதல் அடுத்த நாளில் சில மணி நேரங்களில் கூட சில உண்பார்களாம்.

இதற்கு இடையில் மாலை நேரத்தில் தேநீர் மற்றும் மீடியாலுனாஸ் உண்பார்கள்.

மீடியாலுனாஸ் அர்ஜென்டீனாவின் பாரம்பரிய உணவாகும்.

El Pato தான் அதிகாரப்பூர்வ விளையாட்டு

நாம் நினைப்பது போல கால்பந்து அர்ஜென்டீனாவின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அல்ல.

மாறாக, El Pato என்பது தான் அவர்களது அதிகாரப்பூர்வ விளையாட்டாக 1953ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த வார்த்தைக்கு வாத்து என்று பெயர்.

இது குதிரை வீரர்களால் விளையாடப்படும் விளையாட்டாகும்.

போலோ மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளை கலந்தது போல இருக்குமாம் இந்த விளையாட்டு.

1600ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டில் ஆரம்பத்தில் உயிருள்ள வாத்தை பயன்படுத்தி விளையாடியிருக்கின்றனர்.

வெள்ளியால் நிறைந்த நாடு

அர்ஜென்டினா என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் வெள்ளி என்று அர்த்தமாம்.

இத்தாலி, பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்று போர்சுகீசிய மொழிகளில் வெள்ளி, வெள்ளி நிற, வெள்ளியால் ஆனா ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கிறது அர்ஜென்டீனா.

அர்ஜென்டீனாவின் வெள்ளி சுரங்கங்கள் குறித்து பல கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன.

Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!
கத்தார் : உலக கோப்பைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பலி வாங்கிய அரபு தேசம்!

பெரிய டைனோசர்கள்

அர்ஜென்டீனாவில் கிடைக்கப்பட்ட புதைப்படிவங்களில் தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய டைனோசர் எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது.

குறிப்பாக படகோனியா பகுதியில் தான் அதிகமான டைனோசர் புதைப்படிவங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த பகுதி இப்போது பாலைவனமாக இருந்தாலும் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பசுமை நிறைந்த காடாக இருந்ததாக கூறுகின்றனர்.

Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!
மீண்டும் டைனோசர்கள்: Dinosaur கருமுட்டையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com