உலகின் மிக ஆபத்தான 5 பாலங்கள்: உங்களுக்கு நிச்சயம் த்ரில் அனுபவத்தை தரும்!

சில பாலங்கள் நடுங்கவைக்கும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு த்ரில்லர் அனுபவத்தைப் பெற பெரும்பாலும் இந்த இடங்களுக்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
Carrick a Rede Rope Bridge, UK
Carrick a Rede Rope Bridge, UKTwitter
Published on

உலகில் பல்வேறு அழகான பாலங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பார்த்திருப்பீர்கள்.

சில பாலங்கள் நடுங்கவைக்கும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு த்ரில்லர் அனுபவத்தைப் பெற பெரும்பாலும் இந்த இடங்களுக்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

அந்த வகையில் உலகின் மிக ஆபத்தான ஐந்து பாலங்களைப் பற்றி இங்கு காணலாம்.

கேரிக் எ ரெட் ரோப் பிரிட்ஜ், ( Carrick a Rede Rope Bridge, UK)

நீங்கள் மிகவும் சாகசமாக ஏதாவது செய்ய விரும்பினால் கண்டிப்பாக இங்கிலாந்தில் உள்ள கேரிக் ஏ ரெட் ரோப் பாலத்திற்குச் செல்லுங்கள்.

உலகில் கட்டப்பட்ட பயங்கரமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு மிரட்டலான அனுபவத்தை கொடுக்கக்கூடிய இடத்தில் அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் நீளம் சுமார் 20 மீட்டர். கீழே உள்ள பாறைகளிலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பல சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தை பார்வையிட வருகிறார்கள்.

ராயல் கார்ஜ் பாலம், அமெரிக்கா ( Royal Gorge Bridge)

கொலராடோவில் இருக்கும் ராயல் கார்ஜ் பாலம், மிகவும் ஆபத்தான பாலமாக அறியப்படுகிறது. இது இரண்டு மிக உயரமான மலைகளுக்கு இடையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது,

ராயல் கார்ஜ் பாலம் 1929 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் சுமார் 955 அடி. இது அமெரிக்காவின் மிக உயரமான தொங்கு பாலமாகும். மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை பெற இந்த பாலத்தை பார்வையிட பல சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

ஹுசைனி தொங்கு பாலம், பாகிஸ்தான் ( Hussaini Hanging Bridge)

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஹுசைனி தொங்கு பாலம் உலகின் மிக ஆபத்தான பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள இந்த பாலம் ஹன்சா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

இது இரண்டு கிராமங்களை இணைக்க உதவுகிறது. ஆனால் இந்த பாலத்தை கடப்பது மிரட்டலான அனுபவத்தை கொடுக்கும்.

Carrick a Rede Rope Bridge, UK
மேற்கு தொடர்ச்சி மலை : குளிர்காலத்தில் நிச்சயம் காணவேண்டிய 5 அற்புத தலங்கள்!

லங்காவி ஸ்கை பாலம், மலேசியா ( Langkawi Sky Bridge)

மலேசியாவில் உள்ள லங்காவி ஸ்கை பாலம் 2004-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. உலகின் மிக நீளமான வளைந்த பாலங்களில் ஒன்றாக கருதப்படும் லங்காவி ஸ்கை பாலம் சுமார் 660 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அதன் தனித்துவத்தின் காரணமாக, பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த ஆபத்தான பாலத்தை கண்டு த்ரில்லரான அனுபவத்தை பெறுகின்றனர்.

கிளாஸ் பாட்டம் பாலம், சீனா (Glass Bottom Bridge )

பலரும் இந்த கண்ணாடி பாலத்தின் புகைப்படங்களை இணையதளத்தில் பார்த்திருப்பீர்கள். சீனாவில் அமைந்துள்ள இந்த பாலம் முழுவதும் கண்ணாடியால் ஆனது.

டிரான்ஸ்பிரண்ட்டாக இருக்கும் அந்த பாலத்தில் நடக்கும்போது, ​​கீழே ஆழம் தெரியும். இதனால் பலரும் பயந்து அதனை முழுமையாக கடக்க முடியாமல் போகிறது.

இது சுமார் 1230 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 984 அடி. இந்த பாலம் உலகின் ஆபத்தான பாலங்கள் லிஸ்டில் மட்டுமில்லாமல் மிக உயரமான பாலமாகவும் அறியப்படுகிறது.

Carrick a Rede Rope Bridge, UK
தமிழ் நாட்டில் மிஸ் செய்யக் கூடாத 5 மலை ஏற்றங்கள்! - ஓர் அட்டகாச பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com