அதென்ன நெருப்புக் கோழி முதலீட்டாளர்கள்? - முதலீட்டாளர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மனதைப் புரிந்து கொள்வது மிக எளிது. நடவடிக்கை அடிப்படையில் பல விலங்குகளின் பெயர்களில் முதலீட்டாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதைத்தான் இந்த கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
Investors
InvestorsCanva
Published on

பங்குச் சந்தைகளில் காளைச் சந்தை, கரடி சந்தை என பொதுவாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். காளை முதலீட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் சந்தை காளைச் சந்தை என்றும், கரடி முதலீட்டாளர்கள், வர்த்தகர்களால் முன்னெடுக்கப்படும் சந்தை கரடி தந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டு விலங்குகள் தவிர இன்னும் பல விலங்குகளின் பெயர்களில் முதலீட்டாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதைத்தான் இந்த கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

காளை

காளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் என நேர்மறை நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார். ஒரு குறிப்பிட்ட பங்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துறை அல்லது ஒட்டுமொத்த சந்தையும் அதிகரிக்கும் என இவர்கள் நம்புவர். தொடர்ந்து நீடித்த வளர்ச்சி காணும் சந்தையைக் காளைச் சந்தை என்பர்.

கரடி

இவர்கள் காளை முதலீட்டாளர்களுக்கு நேரெதிர் மனநிலை கொண்டவர்கள். எப்போதும் சந்தை சரியும் என எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கரடி முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள். பங்குச்சந்தைகளில் ஷார்ட் செல்லிங் அதிகம் செய்பவர்கள் கரடி முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள்தான். சந்தை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சரிந்து வந்தால் அதைக் கரடி சந்தை என்பர்.

Investors
InvestorsCanva

முயல்

பங்குச்சந்தையில் ஒரு நாள் தொடங்கி ஒரு சில வாரக் காலத்துக்குள் பங்குகளை வாங்கி விற்றுச் செல்பவர்கள் இந்த முயல் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள். அதிர்ஷ்டம் இருந்தால் இந்த குறுகிய கால முதலீடுகள் மூலம் அவர்கள் கொஞ்சம் காசு பார்க்கலாம். இப்படிக் குறுகிய காலத்திற்குப் பங்குகளை வாங்கி விற்பதால் இவர்கள் அதிக தரகு கட்டணத்தையும் 15% குறுகிய கால மூலதன ஆதாய வரியையும் செலுத்த வேண்டியிருக்கும். சுருக்கமாக இவர்கள் சந்தையின் ஒவ்வொரு நகர்வுக்கும் அதிகமாக எதிர்வினையாற்றுவர்.

ஆமை

ஆமை முதலீட்டாளர்கள் மிக நிதானமாக முதலீடு செய்வர். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான். சந்தை ஏறுவது இறங்குவது குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டே இருப்பர். இவர்கள் குறுகிய காலத்தில் கொஞ்சம் ஆட்டம் கண்டது போலத் தெரிந்தாலும் நீண்டகாலத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தை ஈட்டுவர். இத்தனை நிதானத்தைக் கடைப் பிடிக்காமல் கொஞ்சம் அதிரடி காட்டினால் கூட இவர்களால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.

Investors
InvestorsNews Sense

நத்தை

என்னதான் பங்குச்சந்தைகளில் ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல்வேறு நிதிசார் முதலீடுகள் இருந்தாலும் ஃபிக்ஸட் டெபாசிட் போல வருமா? எனப் பழங்கதை பேசும் முதலீட்டாளர்கள் இவர்கள். முதலீடு செய்வதைவிட வங்கிகளில் பணத்தைச் சேமித்து வைப்பதையும் பழங்கால காப்பீடு பாலிசிகளை வாங்கி வைப்பதையும் பிரதானமாகச் செய்வர். தங்கள் பணத்தின் மதிப்பு பணவீக்கத்தால் பாதிக்கப்படுவதை இவர்கள் உணர்வதில்லை.

கோழி

பங்குச்சந்தை தொடர்பாக யாரிடமாவது ஏதாவது ஆலோசனைகள் வந்தால் மட்டும் சந்தைக்குள் பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இவர்கள். குறிப்பாக பங்குச் சந்தை ஒரு நல்ல ஏற்றம் கண்டு விலை அபரிவிதமாக ஏற்ற இறக்கம் காணத் தொடங்கும் காலகட்டத்தில் சந்தைக்குள் நுழைவர். இதனாலேயே இவர்கள் சந்தையில் பெரிய லாபத்தை ஈட்ட முடியாது. பொதுவாகக் கோழி முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகமாக இருக்கும்.

Investors
InvestorsTwitter

பன்றி

ஆரம்பக் காலத்தில் சீறும் சிறப்புமாகத் திட்டமிட்டு ஓரளவுக்கு நன்றாகவே பங்குகளைக் கணித்து வாங்கி நல்ல லாபம் பார்க்கத் தொடங்குவர், காலப்போக்கில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு சகட்டுமேனிக்கு பங்குகளை வாங்கி குவித்து இன்னும் விலை ஏறும் இன்னும் விலை ஏறும்எனக் காத்திருப்பர். பன்றி முதலீட்டாளர்கள் தான் பங்குச் சந்தையில் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கக் கூடியவர்கள்.

நெருப்புக்கோழி

பொதுவாக முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு ஒரு விஷயத்தைத் தீர்மானிக்க முடியாமல் தவிப்பர். இந்த நெருப்புக்கோழி முதலீட்டாளர்கள் தங்கள் பார்வைக்கு ஒத்து வரக்கூடிய விஷயங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வர். தங்களுக்கு ஒத்துவராத அல்லது தங்கள் கருத்துக்கு முரணான செய்திகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். இது சில நேரங்களில் இது போலச் சந்தை செய்திகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உதாரணமாக மார்ச் 2020 காலகட்டத்திலிருந்து தற்போது வரை இந்தியப் பங்குச் சந்தை உயர்ந்ததைக் கூறலாம். ஆனால் ஒரு முதலீட்டாளர் எப்போதும் பங்குச் சந்தையில் நிலவும் எதார்த்தத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது.

Invesment
InvesmentCanva

சுறா

கடலில் எப்படி சுறாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமோ அதே போலச் சுறா முதலீட்டாளர்களிடம் இருந்து மற்ற முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பைசா பெறாத பங்கை தங்களுக்குள் வாங்கி விற்று விலையை ஏற்றிக் கொண்டிருப்பர். சந்தை பற்றிய நுணுக்கங்கள் அதிகம் அறியாத முதலீட்டாளர்கள் சிக்கும் போது மொத்த பங்குகளையும் விற்று கல்லா கட்டிவிடுவர். பிறகு அவர்களைக் குறித்த எந்த விவரங்களும் அத்தனை எளிதில் கிடைக்காது.

திமிங்கலம்

திமிங்கல முதலீட்டாளர்கள் தனிநபர்கள் அல்ல, இவர்கள் மிகப்பெரிய பணபலம் கொண்ட நிறுவனங்கள். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களை (DII) இந்த ரகத்தில் சேர்க்கலாம். இவர்கள் ஒரு முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் நூறு முறை யோசிப்பர். பலபேரிடம் பல நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பர். இவர்கள் முதலீடு செய்வதாகத் தீர்மானித்துவிட்டால் நிதானமாக முதலீடு செய்யத் தொடங்குவர். இவர்கள் முதலீடு செய்யும் செய்தி ஒட்டுமொத்த சந்தை மனநிலையையும் தலைகீழாக மாற்றும் சக்தி படைத்தது. சிறு முதலீட்டாளர்கள் இந்த திமிங்கல முதலீட்டாளர்களைக் கூர்ந்து கவனிப்பது நல்லது.

Investors
Jio Ambani History : பங்குச் சந்தையின் பிதாமகன் ஆனது எப்படி? - பகுதி 10

ஆடு

ஆடு முதலீட்டாளர்கள் ஒரு மந்தை மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பர். முதலீட்டு ஆலோசகர்கள், ஆன்லைனில் கிடைக்கும் முதலீடு சார்ந்த ஆலோசனைகள், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் ஆலோசனைகள்... எனப் பலவற்றையும் கண்மூடித்தனமாக நம்பி முதலீடு செய்வர். பொதுவாக இவர்கள் காளை சந்தையின் கடைசிக் கால கட்டத்தில் பங்குச் சந்தைக்குள் நுழைந்து கரடி சந்தையின் கடைசிக் காலகட்டத்தில் வெளியேறுவர்.

Investors
Jio அம்பானி கதை: அரசியலில் வியாபாரம், வியாபாரத்தில் அரசியல் - திருபாய் மங்காத்தா |பகுதி 16

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com