சிகரெட் பிடித்துக்கொண்டே மாரத்தானில் ஓடியுள்ளார் சீனாவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர்.
சமூக விழிப்புணர்வு, உடல் நலம், பொது நலம் போன்ற நிறைய காரணங்களுக்காக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. மாரத்தானில் பங்கேற்பதும் சாதாராண காரியமல்ல. நம் உடலில் அதற்கு தேவையான ஸ்டாமினா இருப்பது மிகவும் அவசியம். ஓட்டப்பந்தைய வீரர்கள், சாதாரண மக்கள், குழந்தைகள் என அனைவருமே, மாரத்தானில் பங்குகொள்ளலாம்.
முறையான பயிற்சிகள், குறிப்பாக சுவாசத்தை மேம்படுத்த பயிற்சிகள் பெற்று மாரத்தானில் ஓடுவார்கள். இருப்பினும், கடைசி வரை தாக்குப்பிடித்து ஓடுவது வெகு சிலரே.
இப்படியிருக்க, சீனாவில் 50 வயதாகும் சென் என்பவர் புகைப்பிடித்துக்கொண்டே மாரத்தானில் ஓடியுள்ளார். ஓட்டப்பந்தைய வீரரான இவரை அங்கிள் சென் என்றழைக்கின்றனர்.
விளையாட்டு வீரர்கள், முக்கியமாக ஓட்டப்பந்தைய வீரர்கள் புகைப்பிடிக்க கூடாது என்பது நாம் அறிந்ததே. புகைப்பிடிப்பதால், இவர்களது இதயம், நுரையீரல், மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இது அவர்களது உடல் நலத்தை பாதிக்கும், எளிதில் சோர்வடைய செய்துவிடும். சீனாவில் கடந்த நவம்பர் 6 அன்று, ஜின் அஞ்சியாங் மாரத்தான் நடத்தப்பட்டது. 42 கிலோமீட்டர் தொலைவிற்கு வீரர்கள் ஓடவேண்டும்.
ரன்னிங் பத்திரிக்கையின் அறிக்கை படி,, சென் இதற்கு முன்னர் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாரத்தான்களிலும் இதே போல தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டு ஓடியுள்ளார். 2018 மாரத்தானை 3 மணி நேரம் 36 நிமிடங்களில் முடித்த சென், 2019ல் 3 மணி நேரம் 32 நிமிடங்களில் முடித்தார்.
இருப்பினும் சிலர், இவர் புகைப்பிடிக்காமல், மாரத்தானில் பங்கேற்றால் இன்னும் சிறப்பாக செயல்படலாம் எனவும் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust