Disney Princess போல உடையணியும் 50 வயது பெண் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நாம் சிறுவயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் உடையணிகிறார். ஆசைக்காக ஒரு நாள் அணிகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...
Little Princess of Anfu Road.
Little Princess of Anfu Road.டிவிட்டர்
Published on

குழந்தைகள் அணிவது போல ஃபிராக் அணியும் 50 வயது பெண் ஒருவர் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.

எப்போதும் குழந்தைகளை போல இருக்கவேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். காரணம், அவர்களுக்கு யார் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இருக்காது. இங்கும் ஒரு ஐம்பது வயது பெண் ஒருவர் தன் வாழ்வை கேர் ஃப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார். அவரின் இந்த நடவடிக்கை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Little Princess of Anfu Road.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த 47 வருட பழைய புகைப்படம் - இணையத்தில் வைரல்

சீனாவின் ஷாங்காய் நகரத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் நாம் சிறுவயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் உடையணிகிறார். ஆசைக்காக ஒரு நாள் அணிகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...

அவர் தினமுமே டிஸ்னி பிரின்செஸ் போல தான் உடையணிகிறார். எப்போது, எங்கு சென்றாலும், இவர் டிஸ்னி உடையில் தான் செல்கிறார். இவரது தினசரி outfit, ஒரு கவுன், தலையில் கிரீடம் போல அணியும் டியாரா எனப்படும் அணிகலன், கழுத்தில் அந்த கவுனுக்கு ஏற்றவாறு ஒரு நெக்லஸ், கையில் ஒரு ஹேண்ட் பேக்.

சுற்றியிருப்பவர்கள் இவரை பார்த்து வியந்தாலும், பாராட்டினாலும், அல்லது எள்ளி நகையாடினாலும் இவருக்கு அதை பற்றி கவலை இல்லை.

இந்த பெண்மணிக்கு உள்ளூர்வாசிகள் கொடுத்துள்ள பெயர், Little Princess of Anfu Road. ஒரு தரப்பினர் இவரது இந்த நடவடிக்கை தங்களுக்கும் உற்சாகம் அளிப்பதாக கூறுகின்றனர். மற்றவர்களோ, இந்த பெண்ணுக்கு மன நிலை பாதித்துள்ளது என்றும், முறையாக உடை அணிந்துகொள்ள இவருக்கு தெரியவில்லை எனவும் கூறுகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் நான் என் மனம் போகும் போக்கில் தான் இருப்பேன் என கெத்தாக கவுன் அணிந்து செல்கிறார் இந்த பெரிய Princess.

Little Princess of Anfu Road.
ஆர்டர் செய்தது ஐஸ்க்ரீம்...வந்தது ஆணுறை : இணையத்தில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com