Adventure Lovers அதிரடியாக புத்தாண்டைக் கொண்டாட 6 அம்சமான இடங்கள் - ஓர் வாவ் செய்தி
கொரோனா பிரச்னைகள் எல்லாம் ஓரளவுக்கு தற்போது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதிய இடத்திற்கு சென்று புத்தாண்டை கொண்டாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிலர் சொகுசுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற சிலரோ இந்த புத்தாண்டை அதிரடி பயணத்தில் இருந்து தொடங்குவோம் என விரும்புகின்றனர். அப்படி அட்வென்சரை பெரிதும் விரும்பும் நபர்கள் இந்த ஆறு இடங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
1. Northern Laos
தற்போது இந்நாட்டின் எல்லைகள், சாகச விரும்பிகளுக்கு முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் பைக் பேக்கிங்,சைக்கிள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.
லுயங் ப்ரபாங் (Luang Prabang) பகுதிக்கு வந்து சேர்ந்த பின், அங்கிருந்து பிரதான சாலை வழி பக் மொங் (pak mong) செல்ல வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும்.
பக் மொங் செல்வதற்கு முன், நொங் கியாவ் (Nong Khiaw) பகுதியில் ஒரு சில நாட்களை அழகாகக் கழிக்கலாம். அதன் பின் பக் மொங் & பக் பெங்கைச் சென்றடையலாம்.
அதன் பின் சில நாட்கள் செலவழித்து சாயாபூரி (Xayaboury) சென்றடையலாம். அப்படியே கசி மலைத் தொடரில் பயணித்து பிரதான சாலையைப் பிடித்து லுயங் ப்ரபங்கைச் சென்றடையலாம்.
இந்த வழியில் வெகு சிலரே பயணித்திருப்பார்கள் என்பதால் நீங்கள் லாவோஸ் நாட்டின் பேரழகை ரசிக்கலாம்.
இது கொஞ்சம் சிரமமான பயணம் தான். ஆனால் ரிஸ்க் எடுத்தால் குதூகலப்படுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
2. The Annapurna Circuit, Nepal
உலகின் மிகச் சிரமமான வழித்தடங்களில் ஒன்று இது. தற்போது நேபாளம் அன்னபூர்னா சர்க்யூட்டுக்கு நிறைய சாலை வசதிகளைச் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
பயணிக்கும் சாலைகளைப் பொறுத்து, இந்த சர்க்யூட் 160 - 230 கிமீ தொலைவு கொண்டதாக இருக்கும். பல சுற்றுலா குழுக்கள் மற்றும் சோலோ ரைடர்கள் இப்பாதையில் பயணிக்கிறார்கள்.
இப்பாதையில் வரும் தொருங் லா பாஸ் (Thorung La pass) பகுதியில் 5,416 மீட்டர் உயரத்தைத் தொடுகிறது என்றால், பேசிசாஹர் (Besisahar) பகுதி கடல்மட்டத்தில் இருந்து வெறும் 820 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
இமய மலையின் தாழ்வான பகுதிகளில் இந்து கிராமங்களும், மலைப் பகுதியில் மேல் நோக்கிச் செல்ல செல்ல திபெத்திய கலாச்சாரம் பிரதிபலிப்பது என உங்கள் உடல் மட்டுமின்றி, உள்ளமும் பயணிக்கும்.
கவித்துவமான சாகச விரும்பிகள் சட்டென நேபாளத்துக்கு பைக்கோடு புறப்படலாம்
3. The Four Rivers Trail, South Korea
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து பூசன் வரையான 633 கிமீ தொலைவைக் கடப்பவர்கள் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தென் கொரியாவையும் பார்த்துவிடலாம்.
உலகிலேயே சிறப்பான நீண்ட தூர சைக்கிளிங் வழித்தடங்களில் இதுவும் ஒன்று.
இந்த பயணத்தை மேற்கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. கேம்ப் சைட் தொடங்கி சொகுசு ஹோட்டல்கள் வரை எல்லா வசதிகளும் வழியில் இருக்கும்.
போகிற வழியில் பெரும்பாலான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடலாம்.
தொடர்ந்து ஆற்றை ஒட்டியே இந்தப் பயணம் இருக்கும் என்பதால் இளையராஜாவோ, ரஹ்மானோ உடன் வந்தாலும் ஆச்சரியபப்டுவதற்கு இல்லை.
கோடை காலம், இலையுதிர் காலம், வசந்த காலத்தில் இந்த பயணத்தை மேற்கொள்வது நல்லது.
4. Mount Kinabalu, Sabah, Malaysia
கடல் மட்டத்தில் இருந்து 4,096 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைப்பகுதி, அந்த பிராந்தியத்திலேயே உயரமான மலைப்பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கினபலு பூங்காவின் தலைமையகத்தில் மலை ஏறத் தொடங்கினால், செங்குத்தாகச் செல்லும் பாதை, பலதரப்பட்ட மழைக்காடுகளைக் கடந்து லபன் ராடா பகுதியைச் சென்றடையும். பொதுவாக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மலைக் குடிசைகளில் தான் மலையேறுபவர்கள் இரவு நேரத்தில் தங்குவர்.
நாள் ஒன்றுக்கு 130 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. மலையேறுவதற்கு பெரிய நுணுக்கங்கள் ஏதும் தேவை இல்லை. ஆனால் உங்கள் உடல் காலநிலையோடு ஒத்துப் போக வேண்டியது அவசியம்.
5. The Chadar Trek, லடாக், இந்தியா
நீர் விழ்ச்சிகள் இயற்கையில் உறைந்து இருந்தால் எப்படி இருக்கும்?
ஒரு ஆறே உறைந்தால்தான் ஒரு பகுதிக்குச் செல்ல முடியுமானால் எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட இடம் தான் சதர் டிரெக்.
லடாக்கில் சன்ஸ்கர் (zanskar) என்கிற ஆறு உறைந்தால் தான் இந்த சாகசப் பயணத்தையே மேற்கொள்ள முடியும். ஆகையால் ஜனவரி & பிப்ரவரி தவிர மற்ற மாதங்கள் சதர் டிரெக்கை மேற்கொள்ள முடியாது.
நிறைய வெப்பமூட்டக் கூடிய ஆடைகள், மலையேற்ற உபகரணங்கள், உதவியாளர்கள் உடன் பயணிக்க வேண்டிய டிரிப் இது.
வாய்ப்பு கிடைத்தால் இப்போதே இந்த 105 கிமீ டிரிப்புக்கு தயாராகலாம்.
6. Ak-Suu Transverse trek, Kyrgyzstan
109 கிமீ தூரம் கொண்ட இந்தப் பயணத்தை கிழக்கு கரகோல் வழியாகப் பயணிக்கத் தொடங்கினால், நிறைவு செய்ய சுமார் ஒரு வார காலம் ஆகலாம்.
பயண வழியில் பல கண்கொள்ளாக் காட்சிகள், ஏரிகள், இயற்கை வனப்பைக் கண்டு கண் குளிரலாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7,500 மீட்டர் உயரம் வரை செல்லக் கூடிய பயணம் இது.
அதோடு மலையேற்றம் குறித்து சில நுணுக்கமான விஷயங்களும் தெரிந்திருப்பது நல்லது.
சுற்றுலா கைடு, உங்கள் பொருட்களை பயணம் நெடுக சுமந்து வர உதவியாளர்களோடு இப்பயணத்தைத் தொடங்குவது சாலச் சிறந்தது. 2023ஆம் ஆண்டை அதிரடியாகத் தொடங்கத் தயாராகுங்கள்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust