Travel : 50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்!

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புகையில் நாம் முதலில் நினைப்பது செலவு குறித்து தான். பட்ஜெட்டில் சுற்றி பார்க்க பல இடங்கள் வெளிநாட்டில் உள்ளன. வெறும் 50,000 ரூபாய் இருந்தால் போதும் இந்த அழகான நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்.
50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்!
50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்! Twitter
Published on

நீங்கள் வெளிநாட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் செலவை நினைத்து பயமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம் பட்ஜெட்டில் சூப்பர் இடங்களுக்கு சென்று வரலாம்.

அதுவும் ரூ. 50,000க்குள் நீங்கள் பார்வையிடக்கூடிய சிறந்த இடங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Dubai
DubaiCanva

துபாய்

ரூ. 50,000க்கு கீழ் உள்ள சர்வதேச பயணத்திற்கு துபாய் சிறந்த தேர்வாகும். மும்பை அல்லது டெல்லியில் இருந்து சுற்று விமான பயணங்களை மேற்கொள்ளலாம். இதற்கு சுமார் 25,000-28,000 ரூபாய் செலவாகும்.

துபாயில் ஒரு இரவுக்கு ரூ.7,000 வரை குறைந்த விலையில் பல ஹோட்டல்கள் உள்ளன. அதன்பின்னர் அங்கு இருக்கும் இடங்களை சுற்றி பார்க்கலாம்.

வியட்நாம்

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள வியட்நாம், பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நாடு.

நீங்கள் ஹோ சி மின் நகரத்திற்கு நேரடியாக விமான டிக்கெட்டுகளை ரூ. 22,000-க்குள் பதிவு செய்யலாம், அதே நேரத்தில் மத்திய ஹனோய்யில் ஒரு இரவுக்கு ரூ. 5,000-க்கும் குறைவான ஹோம்ஸ்டேகளைப் பெறலாம்.

இலங்கை

கண்கவர் இயற்கை அழகில் மூழ்கி விடுமுறையை கழிக்க எண்ணுகிறீர்கள் என்றால் இலங்கை சிறந்த தேர்வாகும்.

மும்பை அல்லது டெல்லியில் இருந்து கொழும்புக்கு விமானம் மூலம் சென்றால் ரூ.25,000-28,000 வரை செலவாகும்.

இலங்கையில், கொழும்பைத் தவிர்த்துவிட்டு, ஹிக்கடுவா, காலி மற்றும் அஹங்கம ஆகிய சிறிய நகரங்களுக்குச் செல்லலாம்.

இந்த நகரங்களில் கொழும்பை விட மிகவும் மலிவான தங்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு இரவுக்கு ரூ. 5,000 அல்லது அதற்கும் குறைவான விலையில் நீங்கள் ஹோம்ஸ்டே, தங்கும் விடுதியை முன்பதிவு செய்யலாம். இந்த இடங்கள் மலையேறுதல் அல்லது கடலில் நீந்துதல் போன்ற பல இலவச விஷயங்களை வழங்குகின்றன.

singapore
singaporetwitter

சிங்கப்பூர்

நீங்கள் முன்பதிவு செய்தால், சிங்கப்பூருக்கு ரூ.28,000-க்குள் ரவுண்ட்டிரிப் விமானத்தைப் பெறலாம்.

இந்த ரவுண்ட் டிரிப் விமானமானது ஒரு பயணியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறக்க அனுமதிக்கும். பின்னர் தொடக்க இலக்குக்குத் திரும்பவும் இது அனுமதிக்கும்.

ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைக் கொண்ட இந்த விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை மற்றும் சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம் ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் பார்வையிடலாம்.

சிங்கப்பூரின் வரலாற்றைப் பற்றி அறிய இலவச நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம் அல்லது அழகிய சிங்கப்பூர் ஆற்றின் வழியாக சைக்கிள் ஓட்டலாம்.

சிங்கப்பூரின் நடைபாதை சிங்கப்பூர், சீன மற்றும் மலாய் உணவுகளை வழங்குகின்றன. சுற்றுலாப் பயணிகள் நகரின் பல மலிவு ஹோட்டல்களில் தங்கலாம்.

50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்!
துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!
Thailand
ThailandPexels

தாய்லாந்து

மும்பை அல்லது டெல்லியில் இருந்து பாங்காக்கிற்கு ரூ.30,000க்கு விமான டிக்கெட் எளிதாக பதிவு செய்யலாம்.

தாய்லாந்தில், ஹுவா ஹின், பட்டாயா, ரேயோங் அல்லது கோ சமேட் போன்ற பல கடற்கரை நகரங்களில் ஒன்றிற்கு காரை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம்.

இந்த கடற்கரை நகரங்கள் பல மலிவான ஹோம்ஸ்டேகள், மற்றும் தங்கும் விடுதிகளை வழங்குகின்றன. தாய்லாந்தின் பிரமிக்க வைக்கும் இயற்கை நிலப்பரப்புகளைக் கண்டு குதூகலமாகுங்கள்.

Angor Wat
Angor WatNews Sense

கம்போடியா

துடிப்பான தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா அதன் அழகிய கோயில்கள், அமைதியான கடற்கரைகள் மற்றும் சுவையான உணவுகளுக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

அங்கோர் வாட்டின் பழங்காலக் கோயில்களைப் பார்க்கவும், டோன்லே சாப் ஏரியின் மிதக்கும் கிராமங்களை ஆராயவும்.

சீம் ரீப், பல பட்ஜெட்டுக்கு ஏற்ற தங்கும் விடுதிகளை வழங்குகிறது.

50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்!
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com