துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என உலக நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள், ஏதோ ஒரு வகையில் ஒன்றாக தான் இருக்கின்றனர். ஒரு மினி இந்தியாவையே உருவாக்கிவைத்திருப்பார்கள்
துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!
துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்! ட்விட்டர்

என்னதான் ஊர் ஊராக நாடுகள் பல சுற்றினாலும், தங்கினாலும் சொந்த மண்னின் வாசம் என்பது நம் எல்லோருக்குமே மனதிற்கு நெருக்கமான உணர்வு. அப்படி பிழைப்பைத் தேடி வெளிநாடுகளில் நாம் இருக்கும்போது நம் ஊர்க்காரர்களை பார்த்துவிட்டால் நம் வீட்டிற்கே சென்றுவந்த உணர்ச்சியை தரும்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என உலக நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள், ஏதோ ஒரு வகையில் ஒன்றாக தான் இருக்கின்றனர். ஒரு மினி இந்தியாவையே உருவாக்கிவைத்திருப்பார்கள்.

அப்படி எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஒரு மினி இந்தியா இருக்கிறது

மொரீஷியஸ்

மொரீஷியஸ் நாட்டின் மக்கள் தொகையில் கிட்ட தட்ட 66 சதவிகிதம் மக்கள் இந்தியர்கள் தான். இதன் காரணமாகவே அங்கு இந்திய உணவு கிடைப்பது அவ்வளவு கடினம் இல்லை. மேலும் மொரீஷியஸில் காஸ்ட் ஆஃப் லிவிங்கும் இங்கு குறைவு தான்

யுனைட்டட் கிங்டம்

2021ஆம் ஆண்டின் ஆய்வு படி இங்கு சுமார் 2.8 சதவிகித இந்தியர்கள் வாழ்கின்றனர். என்னதான் ஆங்கிலேயர்கள் காலத்தில் நாம் இவர்களுக்கு அடிமையாகி கிடந்திருந்தாலும் அந்நாட்டில் இந்தியர்கள் சொல்லக்கூடிய எண்ணிக்கையில் வாழ்ந்து தான் வருகிறார்கள்

ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியர்கள் அதிகமாக செல்ல விருப்பப்படும் நாடுகளாக அரபு நாடுகள் இருக்கின்றன. 2023 நிலவரத்தின்படி இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை27.4 சதவிகிதம்.

ஆக, எந்த பக்கம் திரும்பினாலும் குறைந்தது ஒரு இந்தியரையாவது நாம் பார்த்துவிடலாம்.

மினி இந்தியா உள்ள நாடு என்ற பட்டியலில் யு ஏ ஈ க்கு தனி இடம் தான்!

சௌதி அரேபியா

இங்கு 10 முதல் 13 சதவிகிதம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்த நாடும் மினி இந்தியா உள்ள நாடுகளில் ஒன்று

துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

ஓமன்

ஓமனிலும் அதிக சதவிகிதத்தில் இந்தியர்கள் வாழ்கின்றனர். சுமார் 20 பர்செண்ட்டேஜ். தரவுகளின் படி, 2023ல் 9 லட்சம் இந்தியர்கள் சௌதி நாட்டை தங்களின் இருப்பிடமாக கூறியுள்ளனர்

சிங்கப்பூர்

உலகின் அழகான நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 2023ஆம் ஆண்டில், தரவுகளின் அடிப்படையில் இங்கு 7 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்

துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!
Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!

அமெரிக்கா

உலகில் அதிக இந்தியர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இங்கு 2 முதல் 7 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்

கனடா

சுற்றுலாவுக்கும் சரி, வாழ்வதற்கும் சரி, இந்தியர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கும் நாடு கனடா. இது தான் உலகில் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. வேலை வாய்ப்பு, சுகாதாரம், வாழ்க்கை முறை ஆகியவை இந்தியர்களுக்கு தோதுபடுவது தான் இதற்கு முக்கிய காரணம்

துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!
அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com