61 வயது மூதாட்டியை மணந்த 24 வயது இளைஞர் - குழந்தை பெற 1 கோடி செலவு செய்த ஜோடி

சமீபத்தில் 24 வயதான இளைஞர் 61 வயதான பெண்மணியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அந்த தம்பதி ரூபாய் ஒரு கோடி செலவு செய்து வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெறவுள்ளனர். தற்போது இந்த செய்தி தான் டாக் ஆஃப் தி டவுன்!
Kuran and Cheryl
Kuran and CherylTwitter
Published on

காதலுக்கு வயதும், தோற்றமும் ஒரு பொருட்டல்ல. இதை நிரூபிக்கும் வண்ணம் நிறைய திருமணங்கள் நடந்திருக்கிறது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 24 வயதே ஆன குரான் மெக்கெயின் என்பவர் 61 வயதான செரில் மெக் க்ரிகரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்தது குரான் 15 வயதாக இருந்தபோது தான். செரிலுக்கு திருமணமாகி குழந்தைகள், மற்றும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டன. குரான் அப்போது செரிலின் மகன் கிறிஸ் என்பவருக்கு பணியாற்றி வந்தார். ஆனால் அப்போது இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்ததில்லை.

எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போகவே, ஒரு வருடம் டேட் செய்த பின் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். தன்னை விட 37 வருடங்கள் மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதால், பலரும் அந்த குரானை தூற்றி வந்தனர்.

செரிலிடம் இருக்கும் சொத்துக்காகத்தான் குரான் அவரை காதலிப்பது போல நடிக்கிறார் என்றும், திருமணம் என்பதெல்லாம் நாடகம் என்றும் கூறி வந்தனர்.

இன்னொரு புறம் இவர்களது காதலை கொண்டாடியும் வந்தனர் இணையவாசிகள்.


ஆனால் இந்த காதல் ஜோடி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்தது. இவர்களது திருமணம் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை பெறவுள்ளனர். ஏற்கனவே 7 குழந்தைகள் மற்றும் 17 பேரக்குழந்தைகள் செரிலுக்கு இருக்கும் நிலையில், தற்போது பிறக்கவுள்ளது இவருக்கு எட்டாவது குழந்தையாகும்.

குரானுக்கு இது தான் முதல் குழந்தையாம். இவர்கள் இக்குழந்தையை வாடகை தாய் மூலமாக பெறவுள்ளனர். அதற்கு இவர்கள் செய்யவுள்ள செலவு ரூபாய் 1 கோடி. 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை கிடைக்கும் எனவும், இந்த நிகழ்வை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளனர்.


செரில் குழந்தைக்கு தேவையானவற்றை ஷாப் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும், மேலும் ஒரு Baby Shower நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யப்போவதாக பூரித்துவருகிறார்

Kuran and Cheryl
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com