53 பெண்களை திருமணம் செய்து கொண்ட 63 வயது நபர் : எங்கே?

இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 திருமணம் வரை செய்துகொண்டதாகக் கூறிய அவர் மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடத்ததாக கூறினார்.
63-year-old Saudi Man Married 53 Women
63-year-old Saudi Man Married 53 WomenTwitter
Published on

சவுதி அரேபியாவைச் சேர்ந்த 63 வயதான அபு அப்துல்லா என்பவர் மொத்தம் 53 பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சவுதிக்கு சொந்தமான MBC தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்த பேட்டியில் தனது 53 திருமணங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

முதன்முறையாகத் திருமணம் செய்து கொண்டபோது, ​​ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

20 வயதில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட அப்துல்லா சிறிது காலத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, வேறு திருமணம் செய்து கொள்ள எண்ணி அந்த முடிவை முதல் மனைவியிடம் தெரிவித்தாக அவர் கூறினார்.

அதிலிருந்து விடுபட 2வது பெண்ணை திருமணம் கொண்டுள்ளார் அப்துல்லா. பின்னர் அவர் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு இடையே பிரச்னை வெடித்தது. இப்படி மூன்றாவது, நான்காவது என மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளத் தூண்டியதாகவும், அதற்குப் பின்னர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகளை விவாகரத்து செய்ததாக அபு அப்துல்லா கூறினார்.

இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 திருமணம் வரை செய்துகொண்டதாகக் கூறிய அவர் மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடத்ததாக கூறினார்.

63-year-old Saudi Man Married 53 Women
மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்துகொண்ட நபர் - எங்கே?

அதிலும் ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்குப் போனாராம், அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துப்போய், உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டார் அப்துல்லா.

இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் அப்துல்லா.

அபு பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் அவருடன் ஆதரவாகவும் சிலர் அவரை விமர்சித்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

மேற்கு கென்யாவை சேர்ந்த 61 வயதான டேவிட் சகாயோ கலுஹானா என்பவர் 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி சமீபத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

63-year-old Saudi Man Married 53 Women
சாதி மறுப்பு திருமணம் : சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com