உலகின் பழமையான 8 ரயில் நிலையங்கள் இவைதான்!

ரயிலை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டில் இருக்கும் 8 பழமையான ரயில் நிலையங்கள்தான், உலகின் பழமையான ரயில் நிலையங்களாக, மனிதர்களின் பயணக் கதைகளைச் சுமந்து கொண்டு நிற்கின்றன. அந்த 8 ரயில் நிலையங்கள் எவையெவை என்பதைப் பார்க்கலாம்...
Railway
RailwayTwitter
Published on

மனிதர்களுக்கு ரயில் பயணங்கள் தரும் குதூகலமும் கொண்டாட்டமுமே தனியானதுதான். ஆனால், அது எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் அமைந்துவிடுவதில்லை. பல சமயங்களில் உறவுகளைப் பிரிவதினால் ஏற்படும் துன்பம், துயரம், பிரிவு, பாசம், சோகம் என உள்ளத்தை உலுக்கிப்போடும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு.

இவற்றுக்கெல்லாம் தொடக்கமாக அமைவது ரயில் நிலையங்கள்தான். உலகில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களும் எத்தனை கோடி பேர்களைக் கண்டிருக்கும்..? சொல்வதற்குத்தான் அவைகளிடத்தில் எத்தனை கோடி கதைகள் இருக்கும்..? எத்தனை வரலாற்று நிகழ்வுகள் இருக்கும்..?

குறிப்பாகச் சொல்வதானால், ரயிலை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டில் இருக்கும் 8 பழமையான ரயில் நிலையங்கள்தான், உலகின் பழமையான ரயில் நிலையங்களாக, மனிதர்களின் பயணக் கதைகளைச் சுமந்து கொண்டு நிற்கின்றன.

வாங்க... அந்த 8 ரயில் நிலையங்கள் எவையெவை என்பதைப் பார்க்கலாம்...

Liverpool Road Station
Liverpool Road StationTwitter

லிவர்பூல் சாலை ரயில் நிலையம் (Liverpool Road Station)

1830 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 அன்று திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், உலகின் மிகப் பழமையான ரயில் ஆகும். இந்த ரயில் நிலையக் கட்டடம் நன்கு பாதுகாக்கப்பட்டு, இன்னும் கம்பீரமாக உயர்ந்து நின்றாலும், 1975 ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லை. இது, உலகின் முதல் நீராவி மூலம் இயங்கும், நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைக்காகக் கட்டப்பட்டது. லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர்ரயில்வேவுக்காகக் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையக் கட்டிடம் மற்றும் அதை ஒட்டிய பழமையான ரயில்வே கிடங்குகள், தற்போது மான்செஸ்டரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகக் காட்சி தருகின்றன.

 Broad Green Railway Station
Broad Green Railway StationTwitter

பிராட் க்ரீன் ரயில் நிலையம் ( Broad Green Railway Station)

1830 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 அன்று திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையக் கட்டடம் 1830 முதல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், தற்போதைய இந்த நிலைய கட்டடங்கள் எதுவும், அதன் ஆரம்பக் காலத்தில் கட்டப்பட்ட அசல் கட்டடங்கள் அல்ல. அவற்றின் தோற்றம் 1970 ஆம் ஆண்டுகளில் உள்ளது. உலகின் மிகப் பழமையான ரயில் நிலையமாக இருந்தாலும், இந்த ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு இதுவே காரணம். மேலும், அனைத்து அசல் நடைமேடைகளும் மாற்றப்பட்டுள்ளன.

 Hexham Railway Station
Hexham Railway StationTwitter

ஹெக்ஸ்ஹாம் ரயில் நிலையம் ( Hexham Railway Station)

நியூகேஸில் அபான் டைனில் இருந்து கார்லிஸ்லே வரை செல்லும் டைன் பள்ளத்தாக்கு பாதையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், தொடர்ந்து பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பழமையான ரயில் நிலையம் ஆகும். 1835 ல் திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்திற்காக போடப்பட்ட பெரும்பாலான அசல் ரயில் பாதைகள் மற்றும் கட்டப்பட்ட ரயில் நிலையங்கள் மூடப்பட்டு விட்டதால், இந்த ரயில் நிலையத்தின் அளவு சுருங்கி விட்டது. இருப்பினும் சமீப ஆண்டுகளாக, இந்த நிலையம் புத்துயிர் பெற உதவும் வகையில், அதன் அருகிலுள்ள பகுதி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

 Deptford Railway Station
Deptford Railway StationTwitter

டெப்ட்ஃபோர்டு ரயில் நிலையம் ( Deptford Railway Station)

இது ஒரு சாதாரண ரயில் நிலையமாகத் தோன்றினாலும், நகரத்தின் பழமையான இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் நிலையம் என்ற அடிப்படையில் இது பிரபலமானதாக உள்ளது. மேலும் இது, லண்டனின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. முதல் புறநகர் பயணிகள் ரயில்வே எனக் கருதப்படும் லண்டன் & கிரீன்விச் ரயில்வேயின் ஒரு பகுதியாக, 1836 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இது முதன்முதலில் திறக்கப்பட்டது. 1915 முதல் 1926 வரை மூடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தின் அசல் கட்டடம், கடைசியில் இடிக்கப்பட்டது. 2011 ல், இரண்டாவது கட்டடமும் இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத்தான் தற்போதைய கட்டடம் கட்டப்பட்டது.

Railway
பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்
Liverpool Lime Street Station
Liverpool Lime Street StationTwitter

லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் நிலையம் ( Liverpool Lime Street Station)

இது, உலகின் மிகப் பழமையான, இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் மாபெரும் மெயின்லைன் ரயில் முனையமாகக் கருதப்படுகிறது. 1836 ல் செயல்படத் தொடங்கிய இந்த ரயில் நிலையத்தின் அசல் முனையம் கிரவுன் ஸ்ட்ரீட்டில் இருந்தபோது, நகரத்தின் மையப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இதன் காரணமாகத்தான் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்துக்கு புதிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த அசல் லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், ஒரு மரக் கொட்டகையில்தான் அமைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, கடந்த காலங்களில் பலமுறை, அந்த ரயில் நிலையம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது.

 London Bridge Station
London Bridge StationTwitter

லண்டன் பாலம் நிலையம் ( London Bridge Station)

1836 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம், இங்கிலாந்தின் தலைநகரின் முக்கிய பகுதியில் உள்ள பழமையான இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் நிலையமாகும். அதன் பெயரைப் போலவே, இது லண்டன் பாலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் ஒன்றாக இது இருப்பதால், பல முறை புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், 2009 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த ரயில் நிலையம் சுமார் 1.25 பில்லியன் டாலர் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

Railway
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு
Euston Railway Station
Euston Railway StationTwitter

யூஸ்டன் ரயில் நிலையம் ( Euston Railway Station)

1837 ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையம் தொடங்கப்பட்ட போதிலும், 1960 களில் தான் அதன் அசல் ரயில் நிலையம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட், எடின்பர்க் வேவர்லி, மான்செஸ்டர் பிக்காடில்லி மற்றும் கிளாஸ்கோ சென்ட்ரல் வரை மேற்கு கடற்கரை மெயின் லைன் பாதையின் தெற்கு முனையமாக இது செயல்படுகிறது. அசல் நிலைய கட்டடம், ஒரு பெரிய வளைவு நுழைவாயிலைக் கொண்டிருந்தாலும், 1960 களில் அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்ததாக பழைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இக்கட்டடம், 1960 களின் நவீன அழகியலைப் பிரதிபலித்தது என்பதால், அதன் பின்னர் இந்த ரயில் நிலையத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

Harrow and Wealdstone Station
Harrow and Wealdstone StationTwitter

ஹாரோ மற்றும் வெல்ட்ஸ்டோன் நிலையம் ( Harrow and Wealdstone Station)

லண்டன் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள இந்த பழைய ரயில் நிலையம் 1837 ஆம் ஆண்டு கோடை காலத்தில், முதன்முதலில் அதன் சேவையைத் தொடங்கியது. அந்த நேரத்தில், அந்த பகுதி கிராமப்புறமாக இருந்தது. அதே சமயம் அருகிலுள்ள மிகப்பெரிய குடியிருப்பு பகுதியாக ஹாரோ ஆன் தி ஹில் இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இந்த ரயில் நிலையத்தின் பெயருடன் வெல்ட்ஸ்டோன் என்ற பெயரும் சேர்க்கப்பட்டது. பின்னர் 1960களில், மேற்கு கடற்கரை மெயின் லைன் மின்மயமாக்கம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த நிலையத்தின் சில பகுதிகள் மீண்டும் கட்டப்பட்டன.

Railway
ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண், இன்று தொழிலதிபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedback to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com