8 வயது மங்கோலிய சிறுவன் புத்த மத தலைவராக தேர்வு - சீனா கோபமடைவது ஏன்?

தங்களது நாட்டை சேர்ந்த சிறுவன் புத்தமதத்தின் 3வது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8-year-old Mongolian boy named reincarnation of Buddhist spiritual leader by Dalai Lama
8-year-old Mongolian boy named reincarnation of Buddhist spiritual leader by Dalai Lama Twitter

அமெரிக்காவில் பிறந்த 8 வயது மங்கோலிய சிறுவன், புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக, அந்த மதத்தலைவர் தலாய் லாமா அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து அந்த சிறுவனுக்கு 10வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ம் தேதி நடைபெற்றுள்ளது.

மங்கோலியாவைச் சேர்ந்த கல்கா ஜெட்சன் தம்பா ரின்போசேயின் மறு அவதாரம் இன்று எங்களிடம் இருக்கிறது என்று விழாவின் போது தலாய் லாமா கூறினார்.

மங்கோலிய ஊடக அறிக்கைகளின்படி,

இரட்டையர்களில் ஒருவரான இந்த சிறுவனின் தந்தை அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவனின் பாட்டி, மங்கோலியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தந்தை அல்டன்னர் சின்ச்சுலூன் எனவும், தாயார் மங்க்னசன் நர்மதனாக் என தெரியவந்துள்ளது.

தங்களது நாட்டை சேர்ந்த சிறுவன் புத்தமதத்தின் 3வது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

8-year-old Mongolian boy named reincarnation of Buddhist spiritual leader by Dalai Lama
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது.

ஏனெனில் சீனா, தனது சொந்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுத்த புத்த மதத் தலைவர்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

புத்த மதத்தலைவரை, நாங்கள் தான் தேர்வு செய்வோம். அவருக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என சீனா கூறி வருகிறது. ஆனால், அதற்கு மாறாக, தலாய் லாமா, மங்கோலியாவை சேர்ந்த 8 வயது சிறுவனை, 3வது பெரிய தலைவராக நியமித்ததற்கு சீனா கோபமடைந்துள்ளது.

சீனாவின் இந்த கோபத்தின் காரணமாகவே, சிறுவனை நியமிக்கும் நிகழ்ச்சி ரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

8-year-old Mongolian boy named reincarnation of Buddhist spiritual leader by Dalai Lama
தலாய் லாமா : ஏன் இவரை கட்டுப்படுத்த சீனா விரும்புகிறது? இவர் இந்தியா தப்பி வந்தது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com