மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

மங்கோலிய மக்கள் தங்கள் உடைமைகளை சுருட்டிக்கொண்டு நடக்கப் பழகிக்கொண்டனர், அவர்களின் ஆடுகள், மாடுகள் மற்றும் குதிரைகளும் கூட. அங்கு கால்நடைகள் தான் மனித வாழ்வின் அச்சாணி!
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!canva

மங்கோலியா என்றாலே நம் நினைவுக்கு வருவது மன்னர் செங்கிஸ்கான் தான்! உலகின் பல நாடுகளுக்கு படையெடுத்துச் சென்ற ஒருவர். பசிபிக் கடல் முதல் காஸ்பியன் கடல் வரையிலான பகுதிகளை ஆண்ட மன்னர் அவர். மங்கோலியாவின் தந்தை!

உலகின் கொடூரமான அரசனைக் கொண்டுள்ள இந்த நாட்டுக்கு பல அழகிய பக்கங்களும் உண்டு. வடகிழக்கு ஆசியாவிலிருக்கும் இந்த நாடு நாடோடி மக்களால் உருவானதாகும். செங்கிஸ்கான் நாடோடிப் பழங்குடிகளை ஒன்றிணைத்து மங்கோலியாவை உருவாக்கினார். இப்போதும் அங்கு நாடோடி மக்கள் அதிகம்! அவர்களது வாழ்க்கை வியப்புக்குரியதாக உள்ளது.

செங்கிஸ்கான்
செங்கிஸ்கான்canva

மங்கோலிய நாடோடிகளின் முக்கியத் தொழில் ஆடு, மாடுகள் வளர்ப்பது தான். இடம் மாறி மாறி தங்களது ஆடு, மாடுகளுக்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்து தங்குவார்கள்.

மங்கோலியாவின் மக்கள் தொகை சுமார் 30 லட்சம். ஆனால் நிலப்பரப்பு 1.564 மில்லியன் சதுர கி.மீ. இது இந்தியாவில் பாதி.

இவ்வளவு பெரிய நிலப்பரப்பு தான் இந்த மக்களை, கால் நடைகளுடன் கூட நிறைவான வாழ்வை வாழ வைக்கிறது. இவர்கள் எப்போதும் தங்களது வாழ்விடத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

குளிர்காலத்தில் மலைக்கு முன்னால் தங்களது குடில்களை அமைத்துக்கொள்கின்றனர். வசந்த காலம் வரும் போது ஆற்றுக்கு அருகில் செல்கின்றனர். கோடைக்காலத்தில் தண்ணீர் தேவைக்காக ஆற்றங்கரையிலும், இலையுதிர் காலத்தில் மலை உச்சியிலும் வசிக்கின்றனர். இலையுதிர் காலத்திலேயே குளிர்காலத்துக்கான வைக்கோல்களை சேகரித்துக்கொள்கின்றனர். பெரும்பாலான நாடோடி மக்கள் ஆண்டுக்கு நான்கு முறை தான் இடம் பெயர்கின்றனர், என்றாலும் 30 முறை இடம் பெயர்பவர்களுமுண்டு.

இந்த மக்களில் அதிகமாக ஆடு மாடு வைத்திருப்பவர்கள் செல்வந்தர்களாக கருதப்படுகின்றனர்.

இவர்கள் குடில் அல்லது கூடாரம் அமைத்து தான் வாழ்கின்றனர். நம் ஊர் மக்களின் பெரிய பெரிய வீடுகளைப் பார்த்தால் சிரிக்கத் தான் செய்வார்கள். மங்கோலியாவின் தலைநகரான உலான் பட்டாரில் வாழ்வது கூட இந்த நாடோடி மக்களுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அரிசியோ, மாவோ திடீரெனத் தீர்ந்துப் போனால் நகரங்களில் இந்த பிரச்னை இல்லை என்பதை நினைத்துக் கொள்வார்கள்.

அவர்களின் சிறிய கூடாரத்துக்கு உள்ளேயே தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொள்கின்றனர். தொலைக்காட்சி கூட இருக்கிறது. அங்கு எப்போதும் தேநீர் கொதித்துக்கொண்டே இருக்கும். விருந்தினர்களை வரவேற்க தயாராகவே இவர்கள் இருக்கின்றனர்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்வது கொஞ்சம் பிரச்னையான ஒன்று தான். குறிப்பாக வயதானவர்களுக்கு. மங்கோலிய மக்கள் தங்கள் உடைமைகளை சுருட்டிக்கொண்டு நடக்கப் பழகிக்கொண்டனர், அவர்களின் ஆடுகளும்.. மாடுகள் மற்றும் குதிரைகளும் கூட. அங்கு கால்நடைகள் தான் மனித வாழ்வின் அச்சாணி!

உணவுக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் ஆடு, மாடுகள் அவர்களுக்கு உதவுகிறது. மங்கோலிய நிலப்பரப்பில் 80% விரிந்து கிடக்கும் ஸ்டெப் வகை புல்வெளி அவற்றுக்கு இலவசமாக உணவளிக்கிறது.

கோடைக்காலத்தில் ஆடு மாடுகளின் பால், அவற்றில் தயாரிக்கப்படும் பலவகையான சீஸ்கள் தான் மங்கோலியர்களின் முக்கிய உணவு. குளிர்காலத்தில் இறைச்சியை அதிகமாக உண்கின்றனர். மங்கோலியர்களின் சிறப்பு உணவான பூ டாக் (Boo Dog) தான் உலகிலேயே பழமையான இப்போதும் உண்ணப்படக் கூடிய உணவு எனலாம்.

ஒரு ஆட்டினை அவர்களின் முறைப்படி இரத்தம் வழியாமல் கொன்று அதன் உள்ளுறுப்புகளை வெளியில் எடுத்து சுத்தப்படுத்துகின்றனர். பின்னர் அதன் உள்ளுறுப்புகளையும் தசைகளையும் வெளியில் எடுத்து சுத்தப்படுத்துகின்றனர். ஆட்டுத்தோலில் நன்றாக சூடுபடுத்தப்பட்ட கூலாங்கற்களையும் சுத்தப்படுத்தப்பட்ட தசைகளையும் போட்டு கட்டினால் கற்களின் சூட்டில் தசைகள் வெந்துவிடும். கட்டும்போது மசாலாவாக பயன்படுத்தும் காய்கறி மற்றும் மூலிகைகளை போட்டுவிடுவர். அதுபோக வெளியிலிருந்து தீமூட்டி ஆட்டின் முடியை முழுவதுமாக நீக்குவதனால் இன்னும் நன்றாக வேகும்.

இது அவர்களின் பாரம்பரிய உணவு வகை. மன்னர் செங்கிஸ்கான் போரில் வென்று வரும் வீரர்களுக்கு விருந்தாக இந்த பூ டாக்கை தான் வழங்குவார்.

ஆடு, மாடுகளை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்களின் வாழ்க்கை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்பது தெரியவில்லை.

மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

இப்போது படிப்புக்காகவும், வேலைக்காகவும் பலர் தலைநகரை நோக்கி நகரத்தொடங்கிவிட்டதனால் நாடோடி மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பலர் தங்களது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் நாடோடியாகவே வாழ்ந்து வருகின்றனர். அதுவே அவர்களுக்கு பிடித்ததாகவும் இருக்கிறது.

மங்கோலியப் பொருளாதாரம் கணிசமான அளவு ஆடு, மாடுகளையே நம்பியிருக்கிறது. இதனால் சட்டென பெரிய மாற்றங்கள் வந்துவிடாது.

கோவிட் தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் டிஜிட்டல் நாடோடிகள் அதிகரித்து வரும் சூழலில் மங்கோலியா தனது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நாடோடி வாழ்க்கை கொஞ்சம் நவீனமயமாகலாம்.

அனைத்தையும் விட நகரங்கள் நெரிசலும் மன அழுத்தமும் நிறைந்தது! மங்கோலிய மக்கள் அமைதியான நாடோடி வாழ்வை உலகின் நவீனம் சிதைத்துவிடாது!

மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com