மாடல் அழகிகள் சித்திரவதை : 80 பேர் கைது - நடந்தது என்ன? | விரிவான தகவல்கள்

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்தது.
police and Accused
police and AccusedTwitter
Published on

தென்னாப்பிரிக்காவில் 8 மாடல்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட ஆண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் Krugersdorp நகரத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றது. அதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மாடல் அழகிகளை வைத்து இந்த ஆல்பம் ஷூட் நடத்தப்பட்டது.

இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அந்த ஷூட்டிங்கிற்காக வந்திருந்த குழுவினரை, அங்கு நுழைந்த மர்ம கும்பல் சரமாரியாகத் தாக்கியது.

ஆல்பம் ஷூட்டிங்கிற்கு சென்ற ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல், அனைவரின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

police and Accused
குப்தா சகோதரர்கள் : உத்தர பிரதேசம் டூ தென் ஆப்ரிக்கா - உலகை மிரள வைத்த சகோ-களின் கதை

இதனையடுத்து முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police and Accused
பாலியல் தொழில் நடத்திய மேகாலயா பாஜக தலைவர்? பாக்கெட் கணக்கில் ஆணுறை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com