மாலத்தீவு : தீவு தேசத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நகரம் - என்ன காரணம் தெரியுமா?

நீரின் மீதும் மலிவு விலையில் வீடுகளைக் கட்டமைக்க முடியும், ஒரு பெரிய சமூக வீடமைப்புகளை சமுத்திரத்தின் மீது கட்டமைக்க முடியும், சாதாரண நகரத்தைப் போலவே தண்ணீரின் மீதும் நகரங்களைக் கட்டமைக்க முடியும்.
floating city
floating cityTwitter
Published on

உலக வெப்ப மயமாதல் காரணமாக, அதீத வெப்பம், அதீத குளிர், பசி பட்டினி, பஞ்சம் என உலகின் பல நாடுகள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் கடல்மட்ட உயர்வும் ஒரு மிக முக்கிய பிரச்சனைதான்.

கடல் மட்டம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து ஒரு சில அடிகள் உயர்ந்தால் கூட, நம் சிங்காரச் சென்னையின் பல பகுதிகளை நாம் இழக்க நேரிடலாம் என அறிவியல் சமூகம் எச்சரித்து வருகிறது.

இதற்கு ஒரு தீர்வு காணும் நோக்கில், கடலில் மிதக்கும் வீடுகளைக் கட்டலாம் என சில யோசனைகள் முன் வைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன், தென் கொரியாவில் ஒரு மிதக்கும் நகரத்தை உருவாக்குவதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கான கட்டுமானப் பணிகள் 2023ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட உள்ளது.

Maldives
MaldivesCanva

ஆனால், தற்போது இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத் தீவுகளிலும் ஒரு பிரமாண்ட மிதக்கும் நகரத்தைக் கட்டமைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாட்டர் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் மாலத் தீவுகளின் அரசாங்கம் இணைந்து, இந்த மிதக்கும் நகரத்தைக் கட்டமைக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த மிதக்கும் நகரத்தில் 20,000 மக்களுக்கான வசிப்பிடப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என இலக்கு வைத்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாலத் தீவில் உள்ள மேல் (Male) நகரத்திலிருந்து சுமார் 10 நிமிடம் கப்பலில் பயணித்தால் அப்புதிய தீவுகளைச் சென்றடையலாம். இந்த மிதக்கும் நகரம் பிரைன் கோரல் என்றழைக்கப்படும் ஒரு வித பவளப் பாறைகளைப் போல வடிவமைக்கப்பட உள்ளது.

Maldives
MaldivesCanva

இந்த மிதக்கும் நகரத்தில் மொத்தம் 5,000 யூனிட்டுகள் கட்டமைக்கப்பட உள்ளன. இதில் வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள்... என அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெறும் என சி என் என் ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மிதக்கும் நகரத்தில் முதல் யூனிட் பணிகள் நிறைவு செய்யப்பட்டுத் திறக்கப்படும். ஸ்டூடியோ அபார்ட்மென்ட்கள் 1.5 லட்சம் அமெரிக்க டாலரில் தொடங்கி ஒரு குடும்பம் குடியேறி வாழ்வதற்கான சொகுசு வீட்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் இந்த மிதக்கும் நகரத்தில் மக்கள் குடியேறத் தொடங்கிவிடுவர் என இதைக் கட்டமைக்கும் வாட்டர் ஸ்டூடியோ நிறுவன தரப்பில் கூறியுள்ளனர். மிதக்கும் நகரத்தின் மொத்த கட்டுமானங்களும் 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

floating city
நவ்ரூ முதல் துவாலு வரை : உலகின் மிகச்சிறிய நாடுகள் - அட்டகாச தகவல்கள்
Maldives
MaldivesCanva

மாலத் தீவுகளில் உள்ள, கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களுக்கு இது ஒரு புதிய நம்பிக்கை என வாட்டர் ஸ்டூடியோ நிறுவனத்தின் நிறுவனர் கொயின் ஒல்துயிஸ் (Koen Olthuis) கூறினார்.

நீரின் மீதும் மலிவு விலையில் வீடுகளைக் கட்டமைக்க முடியும், ஒரு பெரிய சமூக வீடமைப்புகளை சமுத்திரத்தின் மீது கட்டமைக்க முடியும், சாதாரண நகரத்தைப் போலவே தண்ணீரின் மீதும் நகரங்களைக் கட்டமைக்க முடியும்.

அப்படிக் கட்டமைக்கப்படும் வீடுகள், நகரங்களில் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை இது நிரூபிக்கும். மாலத் தீவைச் சேர்ந்த மக்கள் பருவநிலை அகதிகள் என்கிற அடையாளத்திலிருந்து பருவநிலை தொடர்பான புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கக் கூடியவர்களாக மாறுவர் என சி என் என் ஊடகத்திடம் கூறியுள்ளார் கொயின் ஒல்துயிஸ்.

floating city
நீங்கள் வேறு நாடுகளுக்கு குடியேற விரும்புகிறீர்களா? - அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை
Maldives
MaldivesCanva

மனிதர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு உலகத்தைப் பாதுகாக்கப் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பது மிகவும் அவசியம். ஒருவேளை நம்மால் அதைத் தடுக்க முடியவில்லை எனில், விரைவில் சென்னையிலும் இது போன்ற மிதக்கும் நகரங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

அப்போது உண்மையிலேயே சென்னைவாசிகள் படகில் தான் அலுவலகத்துக்கும், பள்ளி கல்லூரிக்கும், மளிகை கடைகளுக்கும் செல்ல வேண்டி வரும். அப்படி ஒரு காலம் வந்துவிடக் கூடாது என இறைவனையோ, இயற்கையையோ வேண்டிக் கொண்டால் மட்டும் போதாது, பருவநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்க நம்மால் செய்ய முடிந்த பங்களிப்பைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

floating city
50 வயதை எட்டுவதற்கு முன் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய 11 உலக பயணங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com