உலகின் சிறந்த இடங்களில் வாழ வேண்டும் என்பதும், அங்கேயே தொழில் செய்ய வேண்டுமென்பதும் சாதரணமாக எல்லோருக்கும் இருக்கிற ஒரு கனவுதான்.
ஆனால் அங்கெல்லாம் குடியேற வேண்டுமென்றாலோ, தொழில் தொடங்க வேண்டுமென்றாலோ அதற்கெல்லாம் கோடிக் கணக்கான ரூபாய் செலவாகும் என்பது நாம் அறிந்தது தான்.
ஒருவேளை அங்கு தங்குவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் அவர்களே பணம் தருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் அப்படியான சில இடங்களைக் காண்போம்.
வெர்மான்ட் அமெரிக்காவில் உள்ள ஒரு மலை மாநிலமாகும். இங்கு செடார் சீஸ் மற்றும் புகழ்பெற்ற பென் & ஜெர்ரிஸ் ஐஸ்கிரீம் ஆகியவை உற்பத்தி செய்வதே முதன்மை தொழிலாகும். வெர்மாண்டின் இயற்கையின் அழகின் காரணமாக சிறந்த சுற்றுலா தலமாகவும் அது விளங்குகிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு சுமார் 6,20,000 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இதனால் தான் “ரிமோட் ஒர்க்கர் கிராண்ட் திட்டம்” மூலம் வெர்மாண்ட் நகரில் குடியேறி, நகரை ஒட்டிய கிராமங்களில் சென்று பணி செய்ய விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு $10,000 (தோராயமாக ரூ. 7.4 லட்சம்) வழங்குமென்று மே 2018-ல், வெர்மான்ட் கவர்னர் பில் ஸ்காட் அறிவித்து நிறைவேற்றினார்.
மிதமான குளிர், சுத்தமான காற்று கொண்ட நிதானமான அன்றாட வாழ்வை நடத்த விரும்புவோருக்கு, அமெரிக்காவில் உள்ள அலாஸ்க்கா ஒரு சிறந்த இடமாகும். இப்பகுதியின் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருவதால், அங்கு நிரந்தரமாக வசிப்பவர்களை ஊக்குவிக்கக் கணிசமான தொகையை வழங்குகிறது.
குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அங்கு வசிக்க வேண்டும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் $2,072 (சுமார் ரூ. 1.5 லட்சம்) நிதியுதவியாக வழங்குகிறது.
பல்வேறு வகையான பாலாடைக்கட்டி மற்றும் பிரமிக்க வைக்கும் அழகிய இடங்களுக்குப் பெயர் பெற்ற அல்பினென், சுவிட்சர்லாந்தின் ஒரு சிறிய நகரமாகும். இங்கு வெறும் சுமார் 240 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
45 வயதிற்குப்பட்டவராக இருந்தால் 45,50,000 சுவ்ஸ் ஃப்ராங்குகளும் (தோராயமாக ரூ. 40 லட்சம்), தம்பதிகளுக்கு 25,000 சுவிஸ் பிராங்குகள் (தோராயமாக ரூ. 20 லட்சம்) குழந்தைகளுக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (ரூ. 8 லட்சம். ரூ. ) வீதம் அங்கு வசிப்போருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், குறைந்தது 10 வருடங்கள் அங்கு வசிக்க வேண்டும்.
குடியிருப்போர் கட்டாயமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் போன்ற சில நிபந்தனைகள் உள்ளன. இந்த சலுகைகளைப் பெற சுவிட்சர்லாந்து குடியுரிமை கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது குடியுரிமை கொண்டவரைத் திருமணம் செய்திருக்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சிகரமான சிறிய கிராமம் ஸ்பெயின் நாட்டின் பழமையான இடங்களில் ஒன்றாகும். சுமார் 1,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட கிராமம் இது. இளம் குடியிருப்பாளர்களை ஈர்க்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இங்கு குடியேறும் ஒவ்வொரு இளம் ஜோடிக்கும் 3000 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1.5 லட்சம்) வழங்குகிறார்கள்.
மேலும் ஊரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3,000 யூரோக்கள் வழங்கப்படுகிறது. சுத்தமான சூழலியல் கொண்ட, அழகான இடத்தில் வாழ இது ஒரு சிறந்த வாய்ப்பை இந்த கிராமம் வழங்குகிறது.
ஒரு சிறந்த இடத்தில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு எமரால்டு ஒரு ஏற்ற இடமாகும். அயர்லாந்து எண்டர்பிரைஸ் ஊக்கத் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோரை ஈர்த்து வருகிறார்கள்.
நல்ல தொழில் யோசனைகளைக் கொண்டோரின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஆயிரக்கணக்கான யூரோக்களை நிதியாக வழங்கி ஊக்குவிக்கிறார்கள்.
இத்தாலியின் மையத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் கண்டெல்லா. ஆரம்பத்தில் சுமார் 2,700 பேர் வசித்து வந்த நகரத்தில் இப்போது 8,000 பேர் வரை வசிக்கிறார்கள்.
இங்கு, தனி நபர்களுக்கு 800 யூரோக்களும் (68,000 ரூபாய்) தம்பதிகளுக்கு 1200 யூரோக்களும் (1இலட்சம்), மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 1500 முதல் 1800 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1.5 லட்சம்), மற்றும் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குடும்பங்களுக்கு 2,000 யூரோக்கள் (தோராயமாக. 1.7 லட்சம்) வழங்கப்படுகிறது. மேலும், வேறு இடங்களிலிருந்து அங்கே குடியேறியவர்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
2010 ஆம் ஆண்டில், சிலியின் தலைநகரான சாண்டியாகோ ஒரு ஸ்டார்-அப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மூன்று வருட வேலைக்கான ஒரு ஸ்டார்ட் அப்பை $50,000 (தோராயமாக ரூ. 37 லட்சம்) மானியத் தொகையுடன் வழங்குகிறார்கள். இதன் மூலம் விசா, தொழில் தொடங்க இடம், தொழில் தொடர்புகள் ஆகியவையும் கிடைக்கும்.
தொழில்நுட்பம், வணிகம், வரவிருக்கும் பிற துறைகளில் நல்ல அறிவும், திறமையும் இருந்தால், முதலீடு இல்லாமலே மொரீஸியத்தில் வணிகத்தைத் தொடங்கலாம்.
அங்குத் தொழில் தொடங்குவதற்கு நல்ல சுவாரசியமான யோசனையை, அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் முன்வைக்க வேண்டும். அவர்களின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், 20,000 மொரிஷியன் ரூபாய் (தோராயமாக ரூ. 34,000) நிதியாக கிடைக்கிறது.
சுமார் 50,000 மக்கள் வசிக்கின்ற இந்நகரம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. டவுன்டவுன் ஹவுசிங் இன்சென்டிவ் திட்டத்தின் கீழ், இளம் மாணவர்கள் இந்தப் பகுதியில் 2 ஆண்டுகள் வாழ்ந்து பணிபுரிந்தால், சுமார் $7,000 (தோராயமாக ரூ. 5.2 லட்சம்) வழங்கப்படுகிறது.
யேல் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் இந்நகரம் உலகின் மிகவும் ஒழுக்கமான நகரம் என்றழைக்கப்படுகிறது. அங்கு குடியேறுபவர்களுக்கு $10,000 (தோராயமாக Rs 7.4 lakh) நிதியாக வழங்கப்படுகிறது.
சொந்த வீடு வாங்க விரும்புவோருக்கு ஐந்து வருடக் கடனாக $30,000 (Rs 22 lakh) வழங்கப்படுகிறது. நியூ ஹெவன் பப்ளிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, எங்கு வேண்டுமானாலும் படிப்பதற்கான கல்விக் கடனாக $40,000 (Approx. Rs 29 lakh) வரை வழங்கப்படுகிறது.
சுமார் 40 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட கிரேக்கத் தீவான அண்டிக்டெரா முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிலம், வீடு உட்பட சுமார் $565 (தோராயமாக ரூ. 42,000) உங்களுக்கு மாத உதவித்தொகையாக வழங்கும்.
கடந்த பல ஆண்டுகளாக தீவு மக்கள்தொகை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பழமையான சர்ச், இடம்பெயரத் தயாராக இருக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்கிறது. கிரேக்கக் குடிமக்களுக்குத் தேர்வில் முன்னுரிமை இருந்தாலும் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust