கூண்டில் தனியாக இருந்த கிப்பன் (Gibbon) குரங்கு எப்படி கருத்தரித்தது? என்ற கேள்விக்கு விடைக்கு கண்டுபிடித்துவிட்டதாக வன விலங்குப் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான், நாகசாகியில் குஜுகுஷிமா உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காவில் மோமோ என்ற வெள்ளைக் கைகளையுடைய கிப்பான் குரங்கு தனியாக கூட்டில் அடைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு 12 வயதான மோமோ ஒரு குட்டியைப் பெற்றது. ஆனால் அதுவரையில் அதற்கு ஆண் துணை இருந்தது இல்லை.
இந்த குரங்கு குழந்தை பிறந்தது எப்படி என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் குட்டி குரங்குக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதனையில் அதே பூங்காவில் வாழும் இடோ என்ற 34 வயது கருப்பு கிப்பான் தான் குழந்தையின் தந்தை எனக் கண்டறிந்துள்ளனர்.
மோமோ கர்ப்பமான காலத்தில் அதன் பக்கத்து கூண்டில் இடோ அடைக்கப்பட்டிருந்ததை உயிரியல் பூங்கா உழியர்கள் நினைவு கூர்ந்தனர்.
மோமோவும் இடோவும் கூண்டுகளுக்கு இடையில் உள்ள 0.3 இன்ச் (9 மில்லி மீட்டர்) விட்டமுள்ள சிறிய துளை வழியாக கலவியில் ஈடுபட்டிருக்கலாம் என பூங்காவினர் சிஎன்என் ஊடகத்திடம் கூறியுள்ளனர்.
தாய் மோமோ உடன் வளரும் குட்டி குரங்குக்கு இன்னும் பெயர் வைக்கப்பட வில்லை. 2 கிலோ கிராம் எடையுள்ள அது ஆரோக்கியமாக வளர்வதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust