பொதுவாகவே திருமணம் என்றாலே எல்லா மதத்திலும் சடங்குகள் இருக்கும் அந்தவகையில் இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த தம்பதிகள் 3 நாட்களுக்குக் கழிவறை உபயோகப்படுத்தக் கூடாது என்ற வினோத பழக்கம் தற்போது இணைய உலகில் பேசு பொருளாகியுள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறுவார்கள் அவ்வாறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடக்கும் திருமணத்தில் சில வினோதமான சடங்குகள் உண்டு. அந்த வகையில் இந்தோனேசியா நாட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்கென ஒரு வினோத பழக்கம் உள்ளது.
இந்தோனேசியா மற்றும் மலேசிய வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னியோ என்ற பகுதியில் திடாங் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பழங்குடியின சமூகத்தில் திருமணம் நடக்கும் போது , திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்குத் திருமணமான தம்பதிகள் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்ற அதிர்ச்சி தரக்கூடிய வினோத பழக்கம் நடைமுறையில் உள்ளது.
இந்த பழக்கத்தினை மீறும் தம்பதிகளின் வாழ்வில் திருமண வாழ்வில் முறிவு , தனது துணைக்குத் துரோகம் செய்வது ,குழந்தைகள் பிறந்தால் உயிரிழப்பது போன்ற துயர சம்பவங்கள் நடக்கும் என நம்புகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகும் தம்பதிகள் எங்கே இந்த சடங்குகளை கடைப்பிடிக்காமல் போய்விடுவார்களோ எனக் கண்காணிக்கத் தனி நபர்களை அமைப்பார்களாம் இந்த பழங்குடியின மக்கள்.
அதே சமயம் திருமணமான தம்பதிகளுக்கு மூன்று நாட்களுக்குக் குறைந்த அளவிலான உணவும் நீரும் கொடுக்கும் அவலமும் அரங்கேறுமாம், 3 நாட்கள் முடிந்த பின்னர், அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையைப் பயன்படுத்த அனுமதி அளித்துவிடுவார்களாம்.
எப்போதெல்லாம் இந்த பழங்குடியின மக்களிடையே திருமண நிகழ்ச்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் இந்த வினோத சடங்கும் அரங்கேறுகிறது. திருமணம் முடிந்த பிறகு அந்த தம்பதிகள் மூன்று நாட்கள் மிகவும் கொடூரமானதாக இருக்கும், இந்த மூன்று நாட்களில் திருமணமான தம்பதிகள் வெற்றிகரமாகச் சடங்கினை முடித்துவிட்டால் திருமண வாழ்வு நன்றாக இருக்கும் என நம்புகின்றனர் இந்த பகுதி மக்கள்
இருமனங்கள் ஒத்துப் போவதே திருமணம், இந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் உருவாகியது மனிதர்களாகிய நாம் தான். இந்த டெக் யூகத்திலும் இது போன்ற கண்மூடித்தனமான நம்பிக்கை மாற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு. அந்த மூன்று நாட்கள் இந்தோனேசியாவில் மாறுமா? அதற்கான பதிலை இனிவரும் காலங்கள் தான் கூற வேண்டும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust