பூமர் அங்கிள் : இணையத்தை கலக்கும் ஒற்றை சொல் - இதன் வரலாறு தெரியுமா?

தொடர்ந்து அட்வைஸ் போடுவது, யார் என்ன கூறினாலும் தன் கருத்தை அரை மணி நேரத்துக்குக் ஆர அமர நிதானமாக விளக்குவது எல்லாம் இவர்களுடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம். இவர்களைத் தான் இணையத்தில் பூமர் அங்கில் என மில்லினியல்ஸ் மற்றும் ஜென் சி தலைமுறையினர் விமர்சிக்கிறார்கள்.
Boomer
BoomerTwitter

அந்த காலத்துல... நாங்க எல்லாம் சின்ன வயசுல... போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துபவரா?

என்ன இருந்தாலும் அப்ப மாதிரி வருமா, சொல்ற பேச்ச கேளுங்க தம்பி, இது தான் உங்க வாழ்கைக்கு சரி வரும் பாத்துக்குங்க... போன்ற சொற்களைப் பயன்படுத்துபவரா?

குறிப்பாக இவர்கள் 1946 முதல் 1965ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் பிறந்தவர்களாக இருந்தால், இவர்களைத் தான் பூமர் / பூமர் அங்கில் / பூமர் ஆண்டி என அழைக்கிறார்கள்.

தொடர்ந்து அட்வைஸ் போடுவது, யார் என்ன கூறினாலும் தன் கருத்தை அரை மணி நேரத்துக்குக் ஆர அமர நிதானமாக விளக்குவது எல்லாம் இவர்களுடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இவர்களைத் தான் இணையத்தில் பூமர் அங்கில் என மில்லினியல்ஸ் (1980 - 1996 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள்) மற்றும் ஜென் சி (1996 - 2015 காலத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையினர் விமர்சிக்கிறார்கள்.

Generations
Generations Canva

இணைய தலைமுறை

பொதுவாகவே இணையதளத்தில் தலைமுறை இடைவெளியை பார்க்க முடியும்.

பூமர் என்றழைக்கப்படும் வயதானவர்கள் நல்ல வேலை கிடைப்பதற்கு சிரமப்பட்டனர். அப்படி அவர்கள் எதிர்பார்த்தது போல ஓரளவுக்கு நல்ல வேலை கிடைத்தாலும் கூட தங்களுக்கு வரும் சம்பளம் அல்லது வருமானத்தை வைத்துக்கண்டு சேமித்து செலவு செய்தனர். அவர்களுக்கு செலவழிப்பது முதற்கட்ட பணியாக இல்லை.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மில்லியன்கள் ஓரளவுக்கு சேமிப்பது அதேநேரத்தில் தங்களுக்கு பிடித்தது போல பணத்தை செலவழிப்பது என இருக்கின்றனர்.

ஜென் சி தலைமுறையினர் இப்போதுதான் தங்கள் கல்லூரி படிப்புகளை எல்லாம் முடித்து வேலைக்குச் சேர்ந்திருப்பர். அவர்கள் தங்களுக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை தங்களுக்கு பிடித்தது போல செலவழிக்கிறார்கள் இதில் அதிக ரிஸ்க் உள்ள கிரிப்டோ தொடங்கி ஈக்விட்டி டெரிவேட்டிவ் போன்ற முதலீடுகளும் அடக்கம்.

மூன்று தலைமுறையினருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நிறையவே மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.

Old man
Old manPixabay

ஆனால் விவாதம் என்று வரும்போது, பூமர் தலைமுறையினர் அதிகப்படியாக பேசும்போது அல்லது எதிரில் இருப்பவரின் கருத்தைக் கூட கேட்காமல் தன் போக்கில் தொடர்ந்து பேசும்போது ஓகே பூமர் என பளிச்சென ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.

இது அவர்களின் வயதை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் பாகுபாடு எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் பூமர் தலைமுறையினர்.

மில்லினியல்கள் மற்றும் புதிய தலைமுறை இன்று நாங்கள் படும் சிரமங்களுக்கு நீங்கள் செய்த காரியங்களே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

பொதுவாக இதுவரை உலக அளவில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருந்தவர்கள் அனைவரும் பூமர் தலைமுறையை சார்ந்தவர்களே.

அவர்கள் எடுத்த சுய நலம் சார்ந்த முடிவுகள், தங்களுடைய நாட்டிற்கு பிரத்தியேகமாக நன்மை பயக்கும் என எடுக்கப்பட்ட முடிவுகள், அவர்கள் காலத்திலிருந்த இனவாத பிரச்சனைகள் என பலவற்றை ஜென் சி தலைமுறை சுட்டிக்காட்டுகிறது.

Boomer
நானோ கார் உருவாக்கப்பட்டது ஏன்? - உண்மையை உடைத்த ரத்தன் டாடா
Generations
GenerationsCanva

ஓகே பூமர்

கொஞ்சம் கடுமையாகச் சொல்ல வேண்டுமானால் நீங்கள் செய்து வைத்த சொதப்பல்கள் சரி செய்வதே எங்கள் பணியாக இருக்கிறது என பொங்கல் வைக்கிறார்கள் ஜென் சி மற்றும் மில்லியனியல்கள்.

பூமர் தலைமுறையோ எல்லாவற்றிற்கும் எங்களையே குறை சொல்வது வேலைக்காவது. ஒரு பிரச்சனையை நிதானமாக அணுகி அதற்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் அந்த பொறுமை தான் இன்றைய தலைமுறையிடம் இல்லை என்கிறார்கள்.

சரி, இது போல் வெளி உலகில் பஞ்சாயத்து ஏற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது அவர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஓகே பூமர் என்கிற சொல் நியூசிலாந்து அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான க்ளோ ஸ்வார்பிரிக் (Chloe Swarbrick) தன் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விளக்கத்திற்கு ஓகே பூமர் என்று விடையளித்தார் இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இணையத்திற்கே உண்டான சிறப்புத் தன்மையோடு மில்லியனியல்கள் மற்றும் ஜென் சி தலைமுறை பூமர் தலைமுறையைத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் செய்வினை, கோபி சுதாகர் உட்பட... பல்வேறு சிறிய ஊடகங்களையும் நடத்தி வருபவர்கள் அனைவரும் போகிற போக்கில் பூமர் அங்கிள் குறித்து ஏதோ ஒரு உள்ளடக்கத்தைப் பதிவு செய்ய பிரபலமாகி வருகிறார்கள்.

இந்த விவாதங்களை எல்லாம் தாண்டி ஓ கே பூமர் என்பது இணையத்தில் எல்லையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்று என்பதில் மாற்றமில்லை.

Boomer
Twitter நிறுவனத்தை வாங்க பயன்படுத்திய $44 பில்லியன் பணத்தில் என்னவெல்லாம் செய்திருக்கலாம்?

அதே போலத் தலைமுறையினர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்துப் போவதில்லை.

நீங்கள் எங்களை பூமர் தலைமுறையினர் என்கிறீர்கள், உங்கள் தலைமுறை சரி செய்ய முடியாத அளவுக்குக் கடுமையாக மனித நாகரிகத்தை அழித்துவிட்டது என பூமர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இப்படி ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே மூத்த உறுப்பினர்களை இப்படி அழைப்பது சரியா தவறா என விவாதம் எல்லாம் நடந்தன. ஆனால் ஒரு கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்ப்பது இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை அனைத்து தலைமுறையினருக்கும் இடையில் குறைக்க உதவும். நடக்குமா குமாரு? அது மனிதர்கள் கையில் தான் இருக்கிறது.

Boomer
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com