இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் 33 வயதாகும் ஜாஸ்மின் மெக்லெட்சி. 5 வயது பெண் குழந்தைக்கு தாயான ஜாஸ்மின் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
சிறு வயதிலிருந்தே அவருக்கு உடல் எடை அதிமாக இருந்து வந்துள்ளது. அவருடன் படிக்கும் சக மாணவிகள் அவரின் உடல் எடையும், பெரிய மார்பையும் கிண்டல் செய்துள்ளனர்.
இதனால், ஜாஸ்மின் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவரின் இத்தனை காலம் வரை இதுபோன்ற விமர்சனங்களை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் அவரின் கர்ப்ப காலம், குழந்தை பெற்றெடுத்தவுடன் உடல் மற்றும் மார்பு இன்னும் பருமன் ஆகிவிட்டது.
அவர் கடந்து வந்த துன்பங்களை பற்றி விவரிக்கிறார் ஜாஸ்மின்,
"எனது பெரிய அளவிலான மார்பகம் எனக்கு பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் அசெளகரிகமான உணர்வை அளிக்கிறது. படுக்கையில் உறங்கும்போது கூட அவற்றின் எடையால் அவதிப்படுகிறேன்.
அதனால், அறுவை சிகிச்சை செய்து அளவை குறைக்க போகிறேன். அதற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்" என கூறியுள்ளார்.
இதற்கிடையில் அவரை மார்பக அளவை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர்.
இதனால், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள சுகாதாரநலன் சார்ந்த பொது நிதி திட்டத்தின் கீழ் நிதி திரட்ட முயற்சித்து வருகிறார் ஜாஸ்மின்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust