A23a : உருகும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை; வைரலாகும் அதன் இயற்கை வடிவங்கள்!

இந்த பனிப்பாறை இத்தனை வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது. அதன்பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பனிப்பாறை மீண்டும் நகர தொடங்கியது.
A23a : உருகும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை; வைரலாகும் அதன் இயற்கை வடிவங்கள்!
A23a : உருகும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை; வைரலாகும் அதன் இயற்கை வடிவங்கள்!Twitter

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிவதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதற்கு முன்பு அண்டார்டிகாவின் ஒரு பகுதியாக இருந்த பனிப்பாறை அந்த கண்டத்தை விட்டு நகர தொடங்கியது. இதனால் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் பார்வையை அதன் மீது செலுத்தினர்.

A23a என்று பெயரிடப்பட்ட பனிப்பாறை, கிட்டத்தட்ட 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது.

1986 ஆம் ஆண்டில் அண்டார்டிக் கரையில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டது. அதன் பிறகு வெட்டல் கடலில் நிலைக்கொண்டது.

இந்த பனிப்பாறை இத்தனை வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது. அதன்பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பனிப்பாறை மீண்டும் நகர தொடங்கியது.

காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் பிரிந்த பனிபாறையை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உருகும் ஏ23ஏ பனிப்பாறை இயற்கையாகவே மிக பெரிய வளைவுகளும், குகைகளும் உருவாகியுள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

A23a : உருகும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை; வைரலாகும் அதன் இயற்கை வடிவங்கள்!
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com