அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

இப்படி பனிப்பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி பிரிந்து செல்வதை "கன்று ஈனுவது" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இந்த பிரிதல் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நடக்கவில்லை. இயற்கை காரணிகளாலேயே நடந்திருக்கிறது என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?Twitter
Published on

அண்டார்டிகா கண்டத்தில் லண்டன் நகர அளவிலான மிகப் பெரிய பனிப்பாறை உடைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பனிப்பாறை உடைதல் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருக்கும் ஆராய்ச்சிமையத்துக்கு மிக அருகிலேயே நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி பனிப்பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி பிரிந்து செல்வதை "கன்று ஈனுவது" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர்.

இந்த பிரிதல் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நடக்கவில்லை. இயற்கை காரணிகளாலேயே நடந்திருக்கிறது என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பிரிந்த பனிப்பாறை 1,550 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் தடிமன் 150 மீட்டர்கள் என கூறப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நடந்த மிகப் பெரிய பனிப்பாறை பிரிதல் நிகழ்வு இது என்றும் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?
அண்டார்டிகா : பனிப்பாறைகளுக்கு அடியே ஓடும் ஆறு - ஓர் ஆச்சரிய உலகம்

கடந்த ஆண்டு 1,270 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ஒரு பனிப்பாறை பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பனிப்பாறை பிரிவுகளில் ஆராய்ச்சி மையம் இருக்கும் இடமும் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளதாக 2016ம் ஆண்டு கருதப்பட்டது.

அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?

அதன் படி ஆராய்ச்சி மையத்தை புதிய இடத்துக்கு மாற்றினர். அதுமுதலே அண்டார்டிகாவில் வெயில் காலம் நிகழும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்களில் மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் தங்குகின்றனர். இப்போது மீண்டும் ஆராய்ச்சிமையத்துக்கு அருகில் பனிப்பாறை பிரிந்துள்ளது கவலைக்குறியதாக உள்ளது.

அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?
பிங்க் நிறத்தில் ஜொலித்த அண்டார்டிகா வானம் - ஏன்? என்ன ஆச்சு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com