கோடிக்கணக்கில் ஏலம் போன சர்வாதிகாரியின் வாட்ச் - இதன் மதிப்புத் தெரியுமா?

வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கடிகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து அது ஹிட்லர் (Adolf Hitler) தான் உபயோகப்படுத்தினார் என்பதை உறுதி செய்தனர்.
WATCH
WATCHTwitter
Published on

ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். இந்த பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியை வழிநடத்தி சுமார் 11 மில்லியன் மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார்.

இதன்மூலம் உலகின் கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவராக கருதப்படுபவர்களில் ஹிட்லருக்கு முக்கியமான இடம் உண்டு. இந்த நிலையில் ஹிட்லர் பயன்படுத்திய ஆண்ட்ரியாஸ் ஹூபர் என்ற இந்த கைக்கடிகாரம் தற்போது ஏலத்திற்கு வந்தது.

நாஜிக்களின் சின்னமான கழுகு, ஸ்வஸ்திகா சின்னம் மற்றும் ஹிட்லரின் பிறந்தநாள், அதிபராகப் பதவியேற்ற நாள், ஜெர்மனியில் ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் நாள் போன்றவை இந்த கடிகாரத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிகாரம் ஏப்ரல் 20, 1933 ஹிட்லரின் 44வது பிறந்த நாளின் போது ஜெர்மனியின் தேசியவாத சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களால் பரிசாக அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாட்ச் ப்ரோ என்ற பிரபல இதழின் அறிக்கையின் படி ஹிட்லரின் கைக்கடிகாரம் வெள்ளிக்கிழமை மே 04,1945 ஆம் ஆண்டு ஹிட்லர் பெர்ச்டெஸ்காடனில் பின்வாங்கிய போது அங்கு வந்த பிரெஞ்சு ராணுவ வீரனால் எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு பல தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் கை மாறி தற்போது விற்பனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

WATCH
"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்
ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம்
ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம்Twitter

மேலும் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கடிகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து அது ஹிட்லர் (Adolf Hitler) தான் உபயோகப்படுத்தினார் என்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் இந்த கடிகாரத்தினை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விடுவதாக செய்தி வெளியிட்டபோது யூத தலைவர்கள் 34 பேர் ஏல நிறுவனத்தைக் கண்டித்து கடிதம் எழுதினர். அதற்கு வரலாற்றை அழித்துவிட்டால், அது நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இருக்காது வரலாற்றுப் ஆவணங்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம் என்று ஏல நிறுவனம் விளக்கம் கொடுத்தது.

WATCH
ஹிட்லர் : 1000 குழந்தைகளை Hitler-யிடம் கொடுத்த தாய்மார்கள் - என்ன காரணம் தெரியுமா?
Hitler
HitlerCanva

சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடியாகும் இந்த கடிகாரத்தினை சொந்தமாக்கியது யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com