ஹிட்லர் : 1000 குழந்தைகளை Hitler-யிடம் கொடுத்த தாய்மார்கள் - என்ன காரணம் தெரியுமா?

எஸ்எஸ் பிரிவில் உள்ள ஆண்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருக்குமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள். மேலும் திருமணமாகாமல் இருப்பதையும், கர்ப்பமுற்ற ‘ஆரியப் பெண்கள்’ சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
Hitler
HitlerCanva

1939 இல் இரண்டாம் உலகப் போரை துவக்கிய ஜெர்மனியின் ஹிட்லர் 1930 களின் ஆரம்பத்திலேயே ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். யூதர்கள் மீதான இனவெறுப்பைக் கொண்டிருந்ததோடு தூய ஆரிய இன மேன்மையையும் அவர் பேசி வந்தார்.

உலகை ஆளப்பிறந்தவர்கள் ஆரிய இனத்தவர்கள் என்பது அவரது நாஜிக்கட்சியின் இலட்சியம் ஆகும். இப்படி கொடுங்கோல் சர்வாதிகாரமும், இப்பெருமையும், மற்ற இனவெறுப்பும் சேர்ந்தே ஹிட்லரின் ஆட்சியை வழி நடத்தியது.

Schutzstaffel அல்லது SS எனப்படும் படைப்பிரிவு ஹிட்லர் மற்றும் நாஜி கட்சியின் கீழ் ஒரு பெரும் துணை இராணுவ அமைப்பாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த பிறகு ஜெர்மனியால் முழு ஐரோப்பாவும் ஆக்கிரமிக்கப் பட்டபோது அதற்கு எஸ்எஸ் படைப்பிரிவு உறுதுணையாக இருந்தது.

ஆரம்பத்தில் மியூனிச் நகரில் கட்சி கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தொண்டர் படையாக இது துவங்கியது.

Lebensborne
LebensborneCanva

இந்த எஸ்எஸ் இராணுவப் படைதான் லெபன்ஸ்போர்ன் எனப்படும் திட்டத்தை ஆரம்பித்தது. இதன்படி 1935 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியின் ஆரோக்கியமான ஆரிய மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிப்பது திட்டமிடப்பட்டது. லெபரன்ஸ்போர்ன் என்ற சொல்லுக்கு "வாழ்க்கையின் ஊற்று" என்று பொருள்.

ஆரம்பத்தில் எஸ்எஸ் பிரிவில் உள்ள ஆண்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருக்குமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள். மேலும் திருமணமாகாமல் இருப்பதையும், கர்ப்பமுற்ற ‘ஆரியப் பெண்கள்’ சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

Hitler
"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்

லெபன்ஸ்போர்ன் திட்டம் நாஜி இன சித்தாந்தம் மற்றும் யூஜெனிக்ஸ் கோட்பாடுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. யூஜெனிக்ஸ் என்பது "இன முன்னேற்றம்" மற்றும் "திட்டமிடப்பட்ட இனப்பெருக்கம்" ஆகியவற்றின் கோட்பாடாகும். இது விஞ்ஞான ரீதியாக தவறானதும், ஒழுக்கக்கேடான கோட்பாடாகும். இது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமடைந்தது.

மரபியல் மற்றும் பரம்பரை நீட்சியின் மூலம் மனிதர்களை முழுமையாக்க முடியும் என்றும் சமூகக் குறைபாடுகள் என்று அழைக்கப்படுவதை அகற்ற முடியும் என்று உலகெங்கிலும் உள்ள யூஜெனிசிஸ்டுகள் நம்பினர்.

Lebensborne
LebensborneCanva

லெபன்ஸ்போர்ன் திட்டப்படி "ஆரிய" வம்சாவளியை நிறுவக்கூடிய ஆரோக்கியமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஏற்கப்பட்டனர். இதற்காக எஸ்எஸ் படைப்பிரிவு தனிநபர்களின் விண்ணப்பத்தை பாரதூரமாக பரிசீலித்தது. அவர்களின் குடும்ப பரம்பரை, மருத்துவ வரலாறு ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

இதில் இனத்தூய்மை மற்றும் பிற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. உடல்ரீதியாகவோ, சிந்தனை ரீதியாகவோ குறைபாடுகள் இருந்தால் அவர்கள் இத்திட்டத்தில் ஏற்கப்படமாட்டார்கள். இந்த வழியில் தான் ஆக்கிரமிக்கும் பிரதேசங்களில் ஜெர்மனியின் தூய்மையான ஆரிய வம்சாவளி வகைப்பட்ட மக்கள் தொகையை பெருக்க முடியும் என்று எஸ்எஸ் நம்பியது.

எஸ்எஸ் பிரிவிலிருந்த ஆண்கள்தான் நாஜி ஜெர்மனியின் தூய்மையான ஆரிய இனப்பிரிவினர் என்று அதன் தலைவர் ஹென்ரிச் ஹிம்லர் நம்பினார். மேலும் தனது படைப்பிரிவிலிருந்த ஆண்களை நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். அதே நேரம் எஸ்எஸ் ஆண்களும் அவர்கள் மணம் செய்ய இருக்கும் பெண்களும் தமது ஆரிய வம்சாவளியை நிரூபிக்க வேண்டும்.

Lebensborne
LebensborneCanva

லெபன்ஸ்போர்ன் திட்டத்தின் குறிக்கோள் மற்றும் அமலாக்கத்தை ஹிம்லர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.

அவர் தனது பிரிவில் அப்படி தேர்ச்சி பெறும் ஆண்களை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவும், குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் ஊக்குவித்தார். இதற்கென எஸ்எஸ் ஆண்களக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. ஆனால் எல்லாருக்கும் இந்த நிதியுதவி கிடைக்கவில்லை.

Lebensborne
LebensborneCanva

இத்திட்டப்படி திருமணம் ஆகாத கர்ப்பிணி பெண்களை கவனிப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. தூய இனப்பிரிவு தேர்வில் தேர்ச்சியாகாத பெண்கள் கர்ப்பம் அடைவதோ அவர்கள் கருக்கலைப்பு செய்வதோ பிரச்சினை இல்லை.

ஆனால் அப்படி இனத்தூய்மை கொண்டவர்கள் கருக்கலைப்பு செய்வது பல வழிகளில் தடை செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கென அதிக அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக ஹிம்லர் மதிப்பிட்டார். அதைக் குறைப்பதை குறிக்கோளாக கொண்டு அவர் செயல்பட்டார்.

Hitler
ஜெர்மனி : ஆன்லைனில் ஆர்டர் செய்த அலமாரியில் ரூ.1.2 கோடி பணம் - அடித்த அதிர்ஷ்டம்

லெபன்ஸ்போர்ன் திட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கென்றே தனி வீடுகள், முகாம்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தில் சேர்ந்து ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தையை தன் வீட்டில் வளர்ப்பதற்குத் தனியாக அனுமதி பெறவேண்டும்.


இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த பிறகு லெபன்ஸ்போர்ன் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. ஏனெனில் போரில் ஜெர்மன் வீரர்கள் தவிர்க்க முடியாமல் உயிரிழப்பது ஒரு பெரும் இனச்சேதமாக கருதப்பட்டது.

இதனால் ஆரிய வகை தூய்மையான குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்வதற்கான தேவை உணரப்பட்டது. ஜெர்மனி ஆக்கிரமித்த பிரதேசங்களில் எஸ்எஸ் படைப்பிரிவிலிருந்த ஆண்களும் இதர சிவிலியன் வேலை செய்து வந்த ஜெர்மன் ஆண்களும் அங்கே இருந்த மற்ற நாட்டு பெண்களை கருவுறச் செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பல லெபன்ஸ்போர்ன் வீடுகள் திட்டமிட்டு நிறுவப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் பெண்கள் தமது ஆரிய வம்சாவளியை நிறுவ முடிந்தால் அவர்களது குழந்தைகள் லெபன்ஸ்போர்ன் வீடுகளில் வளர்ப்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Lebensborne
LebensborneCanva

இதன்றி லெபன்ஸ்போர்ன் திட்டம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் ஜெர்மனியர்களை கண்டுபிடித்து அவர்கள் இத்திட்டத்தில் சேருமாறு வலியுறுத்தப்பட்டனர்.

மறுபுறம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஜெர்மன் வம்சாவளி அல்லது ஆரிய இனத்தூய்மை அம்சங்களை கொண்டிருந்தால் கடத்தப்பட்டனர். லெபன்ஸ்போர்ன் திட்டப்படி இந்தக் குழந்தைகள் ஜெர்மனியில் உள்ள ஜெர்மன் குடும்பங்களுடன் தத்தெடுப்பின் மூலம் வளர ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்படி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் ஜெர்மன் குடும்பங்கள் இக்குழந்தைகள் போரினால் அனாதையாகி விட்டதாக நம்பின. உண்மையில் அவர்கள் கடத்தப்பட்ட குழந்தைகள் என்பது அக்குடும்பத்தினருக்கு தெரியாது.

Lebensborne
LebensborneCanva

இத்திட்டத்தின் படி நாஜி ஜெர்மனியின் எதிர்கால சந்ததியினர் பல்கிப் பெருகுவர் என்று ஹிம்லர் நம்பினார். இருப்பினும் இத்திட்டத்தின் படி போதிய மருத்துவ இதர வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் இத்திட்டத்தில் இணைந்த தாய்மார்கள் பல புகார்களை அளித்தனர்.

ஆயிரக்கணக்கான புதிய ஆரியக்குழந்தைகளை வருடந்தோறும் பிறக்கச் செய்திட வேண்டும் என்று இத்திட்டம் விரும்பினாலும் நடைமுறையில் அப்படி செய்ய முடியவில்லை.

இத்திட்டத்தின் படி ஒன்பது ஆண்டுகளில் லெபன்ஸ்போர்ன் வீடுகளில் சுமார் 7,000 குழந்தைகள் மட்டுமே பிறந்தனர். எனவேதான் கடத்தப்பட்ட வெளிநாட்டு குழந்தைகளை இங்கே சேர்த்தனர். இவற்றின் எண்ணிக்கை என்னவென்று யாருக்கும் துல்லியமாகத் தெரியவில்லை.

Lebensborne
LebensborneCanva

இறுதியில் தூய இனப்பெருமை பேசிய இத்திட்டம் கடுமையாக தோல்வியடைந்தது. பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. பெற்றோர்கள் எண்ணிறந்த துன்பங்களை அடைந்தனர். இத்திட்டத்தில் பிறந்த குழந்தைகள் பலருக்கு சமூகத்தில் கடும் அடையாளச் சிக்கல் ஏற்பட்டதோடு சமூக அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

போர் முடிந்து ஹிட்லர் மரணமடைந்த பிறகு இக்குழந்தைகள் லெபன்ஸ்போர்ன் திட்டப்படி தாம் பிறக்கவில்லை என்று காட்டுவதற்கு விரும்பினாலும் கடும் சிக்கல்களை அனுபவித்தனர்.

Lebensborne
LebensborneCanva

ஹிட்லர் ஒரு புறம் வதைமுகாமில் இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றார் என்றால் மறுபுறம் ஏழை ஜெர்மனியர்களை தூய ஆரிய இன குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.

இரண்டையுமே குற்றமென வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றைக்கு உலகில் அப்படி ஒரு இனத்தூய்மை பேசி யாரும் குழந்தையை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. அந்த அளவுக்கு எல்லா இனங்களும் ஒன்றோடு ஒன்று கூடிக் கலந்துள்ளனர்.

Hitler
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com