பாகிஸ்தான்: இளைஞரை கன்னத்தில் ஓங்கி அறைந்த பெண் செய்தியாளர் - நடந்தது என்ன? | Video

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் பெண் செய்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Reporter
ReporterTwitter
Published on

செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த இளைஞரைப் பெண் செய்தியாளர் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூரில் பெண் செய்தியாளர் ஒருவர் பக்ரீத் தினத்தை முன்னிட்டு சிறப்பு செய்தி வழங்குவதற்காக நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேசி முடித்தபின் அருகில் இருந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது வரை அந்த வீடியோவை சுமார் 4.78 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் பெண் செய்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Reporter
பாகிஸ்தான் வாழ் தமிழர்களின் வரலாறு - அட்டகாச தகவல்கள் இதோ

அதில்,

பணியினை செய்து கொண்டிருக்கும் போது இடையூறு செய்வது வெறுக்கத்தக்கது, மேலும் அந்த இளைஞர் அருகில் இருந்த ஒரு குடும்பத்தை வெறுக்கும் வகையில் நடந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

முதலில் இவ்வாறு செய்ய வேண்டாம் என அன்பாகக் கூறினேன், ஆனாலும் அந்த நபர் மீண்டும் இடையூறு செய்ததால் கோபமடைந்து அவ்வாறு செய்தேன் என விளக்கமளித்துள்ளார்.

Reporter
அடுத்த இலங்கை : திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com