உக்ரைனின் 15% பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷ்யா- அமெரிக்காவின் ரியாக்‌ஷன் என்ன?

நேற்று உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்தார் புதின். மாஸ்கோ போரில் பின்னடைவுகளைச் சந்தித்து வருவது தான் இந்த அறிவிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஜோ பைடன் மற்றும் புதின்
ஜோ பைடன் மற்றும் புதின்Twitter

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனில் அதிகப்படியான போர் வன்முறைகள் நடந்திருப்பதாகவும் ரஷ்ய வீரர்கள் பலர் மரணித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உக்ரைனை விரைவில் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் முனைப்பில் இருக்கிறார் புதின். ரஷ்யாவுடன் இறுதி வரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.

இதற்கிடையில் ரஷ்யா போரில் பெருமளவில் பின்னடைந்துள்ளதாக உக்ரைனின் தகவல்கள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய வீரர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பெருமளவில் போர் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் உக்ரைன் கூறியது.

<div class="paragraphs"><p>ஜெலன்ஸ்கி மற்றும் புதின்</p></div>

ஜெலன்ஸ்கி மற்றும் புதின்

Twitter

இந்த வார தொடக்கத்தில் ரஷ்யா வீரர்கள் பற்றாக்குறையால் நாட்டிலிருக்கும் ஆண்களை போருக்கு கட்டாயப்படுத்தி அழைப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக ரஷ்ய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு தப்புவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்தார் புதின். மாஸ்கோ போரில் பின்னடைவுகளைச் சந்தித்து வருவது தான் இந்த அறிவிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய கூட்டமைப்பில் உக்ரைனின் 15% பகுதிகளை புதின் இணைத்துக்கொண்டதற்கு மேற்கு நாடுகள் பதிலளித்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பதிலடி

"ரஷ்யா உக்ரைனின் பகுதிகளை இணைத்துக்கொள்ளும் மோசடி நடவடிக்கையை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நாவின் சாசனத்தை மீறுவதாகும். அமைதியாக இருக்கும் நாடுகளை அவமதிக்கும் செயல் இது" என்று அமெரிக்க அதிபர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Baiden
BaidenTwitter
ஜோ பைடன் மற்றும் புதின்
அடையாளம் தெரியாமல் மாறிப்போன உக்ரைன் ராணுவ வீரர் - பதைபதைக்க செய்த புகைப்படம்

மேலும் அமெரிக்கா, உக்ரைனின் சர்வதேச எல்லைகளை மதிப்பதாகவும். அதனை மீட்க உறுதுணையாக இருக்கும் எனவும் ஜோபைடன் கூறியுள்ளார். 1.1 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவியும் இராணுவத்தை பலப்படுத்த தேவையான உதவிகளும் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அத்துடன் தனது அண்டை நாட்டின் எல்லைகளை மாற்ற ரஷ்யா எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து உக்ரைன் தற்காத்துக்கொள்ளத் தேவையான உதவிகளையும் ஆயுதங்களையும் வழங்கவும் இன்னும் 12 பில்லியன் டாலர்கள் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் எதிர்நோக்குவதாக பைடன் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே பல தடைகளை விதித்திருக்கின்றன. புதினின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் தடைகள் இன்னும் அதிகரிப்பதுடன் புதிய வர்த்தக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் மற்றும் புதின்
ரஷ்யா: நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்; துரத்தும் அதிபர்- என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com