ஸ்கர்ட் குட்டையாக இருக்கிறது - செய்தியாளரைத் தடுத்த சிறை அதிகாரிகள்

சிறை வளாகத்தில் சூழலைச் சமாளித்து மரண தண்டனை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க ஐவானா தன் ஸ்கர்ட்டை இடுப்பிலிருந்து சற்றே இறக்கி அணிந்து கொண்டார். அப்போதும் உயரம் போதவில்லை என சிறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
(Rep)
(Rep)Twitter
Published on

நீட் தேர்வை எழுதச் செல்லும் போது எந்தவித இரும்பு பொருட்களும் உள்ளே எடுத்துச் செல்லப்படக் கூடாது என மிகக்கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதைச் செய்திகளில் பார்த்திருப்போம். சமீபத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற பெண்ணை உள்ளாடையைக் கழற்றச் சொன்னது நமக்கு நினைவிருக்கலாம்.

அதே போல ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தருவாயில், ஒரு பத்திரிகையாளர் அணிந்திருக்கும் ஸ்கர்ட் ஆடை குட்டையாக இருப்பதாகச் சொல்லி அவரை அனுமதிக்காதது சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் சிறைத் துறையில் கடந்த வியாழக்கிழமை இரவு, ஒரு சிறைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அப்போது அது குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் இவானா ஹ்ரைன்கிவ் (Ivana Hrynkiw) ஸ்கர்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருக்கும் ஆடை சிறையின் ஆடை கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு இல்லாமல், குட்டையாக இருப்பதாகச் சிறை நிர்வாக தரப்பிலிருந்து ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

(Rep)
ஜீன்ஸ் வரலாறு: எளிய தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி?

ஏ எல்.காம் என்கிற பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த இவானா ஒரு செய்தியாளர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர். இவர் இதற்கு முன் 7 மரண தண்டனைகள் தொடர்பான செய்திகளைச் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சிறை வளாகத்துக்குச் சென்றிருந்த போது அணிந்திருந்த ஸ்கர்ட் ஆடை, பணிகளை மேற்கொள்வதற்கும், தொழில்முறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் பொருத்தமானதுதான். என் ஹீல்ஸ் காலணியோடு சேர்த்துப் பார்த்தால் நான் 5 அடி 10 அங்குல உயரமானவளாக நீண்ட கால்களைக் கொண்ட பெண்ணாக இருப்பேன் என ஐவானா ஹ்ரைன்கிவ் தன் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

சிறை வளாகத்தில் சூழலைச் சமாளித்து மரண தண்டனை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க ஐவானா தன் ஸ்கர்ட்டை இடுப்பிலிருந்து சற்றே இறக்கி அணிந்து கொண்டார். அப்போதும் உயரம் போதவில்லை என சிறை அதிகாரிகள் மறுத்தனர். உடனடியாக வேடர்ஸ் என்றழைக்கப்படும் ஆடையை உள்ளூர் தொலைக்காட்சி புகைப்படக்காரரிடம் கடன் வாங்கி அணிந்து கொண்டதாக தி கார்டியனின் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

(Rep)
நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்

ஆடை சரி செய்துவிட்டோம், இப்போது உள்ளே செல்லலாமா என்றால், இல்லை. கால் தெரியும்படி அணிந்திருக்கும் ஷூ பிரச்சனையானது. தன் காரில் வைத்திருந்த டென்னிஸ் விளையாட்டுக்கான ஷூவை அணிந்து கொண்டு அந்த பிரச்சனையை சமாளித்தார்.

அது ஒரு சங்கடமான சூழலாக இருந்தது. நான் அதுவரை சந்திக்காத பெரும்பாலானவர்கள் முன்னிலையில் என் உடல் மற்றும் நான் அணிந்திருக்கும் ஆடை தொடர்பாகக் கேள்வி எழுப்பியது எனக்கு மிகவும் அவமானகரமானதாக இருந்தது என ஐவானா தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அசோசியேடெட் பிரஸ் என்கிற செய்தி முகமையைச் சேர்ந்த பெண் செய்தியாளர் கிம் சேண்ட்லர் என்பவரும் இதே போன்ற முழு உடல் பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது ஆடையின் நீளம் அளவிடப்பட்டது. இருப்பினும் அவர் மரண தண்டனை குறித்த செய்திகளைச் சேகரிக்க அனுமதிக்கப்பட்டார்.

(Rep)
பூனையை தண்ணீரில் தள்ளிவிட்டவர் கைது - எத்தனை வருட சிறை தண்டனை தெரியுமா?

இச்சம்பவங்கள் குறித்து அலபாமா ஊடகக் குழுவின் முதன்மை ஆசிரியர் கெல்லி ஆன் ஸ்காட் தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். இது பெண்களுக்கு எதிராக பாலியல் பாகுபாடுகளை நிறுவுவதாக உள்ளது. இது தொழில்முறையிலான மிகவும் மோசமான நடத்தை மீறல். இப்படி இனி வேறு எந்த செய்தியாளருக்கும் நடக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் கெல்லி ஆன் ஸ்காட்.

கடந்த வெள்ளிக்கிழமையே ஏ எல்.காம் நிறுவனம் சார்பாக அலபாமா சிறைத் துறையிடமும், அம்மாகாண ஆளுநரிடமும் இது குறித்து முறையாகப் புகாரளிக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

அசோசியேடட் பிரஸ் முகமையும் அலபாமா மாகாணத்தின் ஆளுநர் கே இவேக்கு (Kay Ivey) இது தொடர்பாக விசாரணை வேண்டும் எனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com