என்னதான் அமெரிக்கா வளர்ந்த, வல்லரசு நாடு என்று சொன்னாலும் அமெரிக்கர்களுக்கும் பேய் மீதான நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, நமது மொழியில் தயாரிக்கப்படும் பேய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புகளை விட வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு மக்கள் ஏகபோக ஆதரவை கொடுக்கின்றனர்.
அதுவும், ஆங்கில மொழியில் வெளியான 'நன்' போன்ற திரைப்படங்கள் உலகளவில் பல கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்தது. இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு பேய் மீது இருக்கும் ஆர்வம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இப்படி அமெரிக்காவில் இருக்கும் பேய் சம்பந்தப்பட்ட மர்மமான விஷயங்கள், அச்சுறுத்தும் நிகழ்வுகள், திகிலூட்டும் இடங்கள் உங்களை ஒரு நிமிடம் திகைக்க வைக்கும்.
அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கிழக்கு மாநில சிறைச்சாலை சிறைக் கைதிகளால் வேட்டையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 1829 ஆம் ஆண்டு திறக்கப்பட இந்த சிறைச்சாலை சிறைக் கைதிகளால் தாக்கப்பட்ட பிறகு 1971 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இப்போது, பார்ப்பதற்கு திகிலூட்டும் விதமாக காணப்படும் இந்த சிறைச்சாலையின் அறைகளைச் சுற்றி மர்மமான குரல்கள் மற்றும் சத்தங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக, நியூ மெக்ஸிகோவில் அமைந்துள்ள ரோஸ்வெல் உண்மையில் மர்மங்கள் நிறைந்த இடமாக திகிலூட்டுகிறது. 1947 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் வசித்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகளின் குப்பைகள் அங்கு இருப்பதாகக் கண்டுபிடித்தார். இந்த விஷயத்தை அங்குள்ளவர்கள் நம்புவதற்கு மறுத்தனர். ஆனால், பின் நாட்களில் அந்த நகரம் கேட்பாரற்று, தனித்து விடப்பட்ட நகரமாக மாறியது.
தென் கரோலினா பகுதியில் உள்ள பாய்ன்செட் பாலம் 1820 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான பாலமாகும். இந்த பாலத்தில் நடந்த கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அந்த மனிதனின் ஆவி அப்பகுதியில் சுற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. தவிர, இந்த இடத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பேய்களின் நடமாட்டம் இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் போடி பகுதி இப்போது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. முன்னர் தங்கச் சுரங்கமாக இருந்து வந்த இந்த இடம் 20 ஆம் நூற்றாண்டில் தனித்து விடப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் ஒரே ஒரு கடை மட்டும் செயல்பட்டு வருகிறதாம். இது தவிர, இந்த சுரங்கத்தில் காணப்படும் பாறையை அல்லது உலோகத் துண்டோ யாரேனும் அகற்றினால், சாபவிமோசனம் ஏற்படும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
அலாஸ்காவில் உள்ள ரெட் ஆனியன் சலூன் மிகவும் பயமுறுத்தும் இடங்களில் ஒன்றாகும். இப்போது பார் மற்றும் உணவகமாக இருக்கும் ரெட் ஆனியன் சலூன் முதலில் ஒரு விபச்சார விடுதியாக இருந்தது. இந்த இடத்தில் தொழில் செய்து வந்த மேடம் லிடியாவின் என்பவர் இறந்த பிறகு அவரது ஆவி அங்கேயே சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. அதுவும், இந்த சலூனின் இரண்டாவது மாடியில் காலடிச் சத்தம் கேட்பதாகவும், அவ்வப்போது சம்பந்தமே இல்லாமல் நறுமணம் வீசுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள ரேஸ்ட்ராக் பிளேயா இடம் ஒரு வறண்ட ஏரிக்கரையாகும். இங்கு நடக்கும் அசாதாரணமான விஷயம் என்னவென்றால், வறண்ட ஏரியின் மேற்பரப்பில் பாறைகள் சறுக்குவதாக சில மாயாஜால காட்சிகள் தோன்றுகிறது. இந்த காட்சி நீண்ட காலமாக மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
பேய் விளக்குகள் என்றும் அழைக்கப்படும் மார்ஃபா கோஸ்ட் லைட்ஸ், டெக்சாஸ் மாகாண மக்களை திகிலூட்டும் விஷயங்களில் ஒன்று. இந்த விசித்திரமான விளக்குகள் சில நேரங்களில் வண்ணமயமான உருண்டைகளாகத் தோன்றி வானத்தில் நகர்வதாக மக்கள் கூறுகின்றனர். இந்த அதிசய நிகழ்வை அங்குள்ள மக்கள் வருடாந்தோறும் மார்ஃபா லைட்ஸ் விழா என்று கொண்டாடி வருகிறார்கள்.
நியூயார்க்கில் உள்ள எடர்னல் ஃபிளேம் ஃபால்ஸ் உலகின் மிக மர்மமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சி ஒரு சிறிய கோட்டையின் மீது விழ, அங்கு ஒரு சுடர் வருவதைக் காணலாம். அதாவது, இயற்கையான மீத்தேன் வாயு, பாறைகளின் விரிசல் வழியாக வெளியேறி அந்த சுடரை உருவாக்குவதாக மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த சுடர் உருவாவதற்கான உண்மைக் காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust