நித்தியானந்தா : 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா' - அமெரிக்காவை அலற வைத்த நித்தி

அமெரிக்கர்கள் மற்றும் சர்வதேச அரசியலை கவனித்து வருபவர்கள் முன்னிருக்கும் ஒரே கேள்வி… நித்தியானந்தாவின் வலையில் அமெரிக்க நகரங்கள் வீழ்ந்தது எப்படி என்பது தான்.
Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?Twitter
Published on

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் வணிக ரீதியிலான அல்லது தொழில் நலன் தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் ஊர் பெயர் தெரியாத, சொல்லப் போனால் அப்படி ஒரு நிறுவனமே இல்லாத போது, ஒரு பிரபல நிறுவனம் அந்த நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்..? அந்தப் பிரபல நிறுவனத்தின் நிர்வாகத்தை மக்கள் எந்த அளவுக்கு விமர்சிப்பார்கள்? அதுதான் சமீபத்தில் அமெரிக்க நகரங்களுக்கு நடந்திருக்கிறது.

நித்தியானந்தா நிறுவிய கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்தியாவில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கும் பதிலளிக்காமல் தலைமறைவான நித்தியானந்தா, உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது எப்படி என்கிற கேள்வி அமெரிக்காவைச் சூழ்ந்துள்ளது.

யார் இந்த நித்தியானந்தா?

மனித வடிவில் இருக்கும் கடவுள் என்று தன்னைக் அழைத்துக் கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர்.

1978 ஜனவரி 1ஆம் தேதியன்று (இந்த தேதியிலேயே சில சர்ச்சைகள் இருக்கின்றன) அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன்.

ராமகிருஷ்ண மடத்தில் கல்வி கற்கத் துவங்கி, 1992ம் ஆண்டில் தன் பள்ளிப் படிப்பை நித்யானந்தா நிறைவு செய்ததாக பிபிசி வலைதளம் சொல்கிறது.

தனக்கு 10 வயது இருக்கும் போதே, திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலையம்மன் சந்நிதியில், அவருக்கு ஶ்ரீ எந்திரத்தின் தரிசனம் கிடைத்ததாகவும், அதை வீட்டில் வந்து வரைந்த போது தன் குரு குப்பம்மாள் பார்த்து வியந்து, ஶ்ரீ எந்திரத்தின் நுணுக்கங்களை விளக்கியதாகவும் காணொளி ஒன்றில் அவரே கூறியுள்ளார் நித்யானந்தா.

இளம் வயதிலேயே ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்ட ராஜசேகரன், தன்னுடைய 12 வயதுக்குள்ளேயே ஞானமடைந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ராஜசேகரன் தன் பெயரை 'நித்யானந்தா' என மாற்றிக் கொண்டு ஆன்மிகத்தில் மேலும் தீவிரம் காட்டினார். காலப் போக்கில் நித்யானந்த தியான பீடம் என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக ஆசிரமங்களைத் தொடங்கினார்.

கர்நாடகா மாநிலத்தில் பிடதியில் உள்ள அவரது ஆசிரமம், தலைமையகமாகச் செயல்பட்டு வந்தது. இந்தியாவைத் தாண்டி பல்வேறு உலக நாடுகளிலும் தன் ஆசிரமங்களைத் தொடங்கி லட்சக் கணக்கில் பக்தர்களை ஈர்த்தார் நித்யானந்தா.

அன்றைய தேதிக்கு சந்தையில் இருக்கும் அப்டேடட் டெக்னாலஜிகளைக் கொண்டு, தன் ஆசிரமத்தில் பிரசங்கம் செய்வார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு டெக்னாலஜி பிரியர்.

சர்ச்சை நாயகன் நித்தியானந்தா

எல்லாம் சிறப்பாகப் போய்க் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பிரபல திரைப்பட நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி வெளியாகி ஒட்டுமொத்த ஆன்மிகவாதிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வழக்கு, விசாரணை, நீதிமன்றம்… எல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மறுபக்கம் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆதீனங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது ஆன்மிக அன்பர்கள் மத்தியில் சர்ச்சையை தீவிரப்படுத்தியது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளை அஹமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைத்திருப்பதாக 2019ஆம் ஆண்டுவாக்கில் கொடுத்த புகாரின் பெயரில், குஜராத் காவல்துறை நித்யானந்தா மீதும், அவரது ஆசிரமத்தின் மீதும் வழக்குத் தொடுத்தது.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட விநாயகி சிலை - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

குழந்தை தொழிலாளர் பிரச்சனை, குழந்தை கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 365, 344, 323, 504, 506, 114 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதாக பல்வேறு வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

அரசு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, திடீரென இந்தியாவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக குஜராத் காவல்துறை கூறியது.

நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்றும் அப்போதைய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.

ஆனால் இன்று வரை இந்திய அரசு தரப்பால் அவரைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் மனிதர் தொடர்ந்து இணையத்தில் லைவ்வாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார்.

உதயமான கைலாசா:

நித்தியானந்தாவைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் விசாரணைக்கு அழைத்து வந்து தண்டனை தருவார்கள் என்று எதிர்பார்த்தால், மறுபக்கம் தலைமறைவாக இருந்த நித்தியானந்தா 2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்றொரு தனிநாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்தார்.

“ஆரூரா… தியாகேசா….

இந்துக்கள் தேசம் கைலாசா..”

என அவரது பக்த கோடிகள் கைலாசாவைப் புகழ்ந்தனர். தங்கள் சொந்த நாடுகளில் இந்துத்துவ முறைப்படி சுதந்திரமாக வாழ முடியாத இந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறப்பட்டது. கைலாசாவுக்கென தனி இணைய தளம், தனி கொடி, நாணயங்கள் வரை வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அவரது இருப்பிடம் எது, கைலாசா இந்த உலகில் எங்கு இருக்கிறது என்கிற கேள்விகளுக்கு யாருக்கும் அதிகாரப்பூர்வமாக விடை தெரியவில்லை.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்?

அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் 'கைலாசா' சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம்

அந்த வேளையில்தான், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி காணொளி, புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாயின. அக்காணொளியில், நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அமெரிக்க நகரம் ஒன்றே கைலாசா உடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால், கைலாசாவை இறையாண்மை நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக திரித்து, நித்தியானந்தாவின் சீடர்கள் பெருமிதம் கொண்டனர்.

ட்விட்டர்

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கைலாசா உரையும், விளக்கமும்

அடுத்தடுத்த நாட்களில், ஐக்கிய நாடுகளில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கைலாசா பிரதிநிதிகள் உரையாற்றிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதும், "நித்தியானந்தா உண்மையிலேயே கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டாரோ? "என்கிற சந்தேகம் பலர் மத்தியிலும் வருவானது.

"பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்றும், இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.

இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரிப்பதாகவும் அவர் பதில் அளித்திருந்தார். இதன்மூலம், சாமியார் நித்தியானந்தா கூறிக் கொண்டபடி, கைலாசாவை தனிநாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
அமெரிக்கா மத போதகர் : 900 மக்களை தற்கொலை செய்ய வைத்த ஒரு போலி சாமியாரின் விறு விறு கதை

30 நகரங்களுடன் டீல் போட்ட கைலாசா 'சிஸ்டர் சிட்டி'

கைலாசாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் கொடுத்ததாகச் சொல்லும் நித்தியானந்தாவின் கூற்று தவறென நிரூபணமான நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் இருந்து வந்தது.

ஒருவழியாக ஐக்கிய நாடுகள் சபை பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், நித்தியானந்தாவின் கற்பனை தேசமான 'கைலாசா' உடன் நெவார்க் நகரம் மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அமெரிக்க நகரங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ், கினீ, சியாரா லியோன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நகரங்களுடன் கைலாசா தேசம் இதே போல கலாசார பரிமாற்ற ரீதியிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும், செய்திகளும் கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. இதில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில் ஒன்று.

ஜாக்சன்வில்லே கொடுத்திருக்கும் பிரகடனம் ஒன்றும் அங்கீகாரம் அல்ல. ஒரு விண்ணப்பத்திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங்களை நாங்கள் சரிபார்க்கவில்லை, என ஜாக்சன்வில்லே நகரம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதேபோல், கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நகரமான நெவார்க்கும் பின்வாங்கியுள்ளது. இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தாவால் ஏமாற்றப்பட்டதை நெவார்க் சிட்டி ஹாலே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

விஜய பிரியா நித்யானந்தா
விஜய பிரியா நித்யானந்தாNewssense

கைலாசா என்ற நாடே இல்லை என்பதைக் கண்டுபிடித்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் நெவார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகின் பெரியண்ணன், வல்லரசு நாடாகக் கருதப்பட்ட அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் கைலாசா போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் பண ரீதியான பலன்கள் எதையும் கைலாசாவோ நித்தியானந்தாவோ பெறவில்லை என்றாலும், கைலாசா ஒரு தனி நாடு என்கிற நித்தியானந்தாவின் வாதத்துக்கு இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வலு சேர்ப்பவையாக அமைந்துவிட்டன.

இப்போது அமெரிக்கர்கள் மற்றும் சர்வதேச அரசியலை கவனித்து வருபவர்கள் முன்னிருக்கும் ஒரே கேள்வி… நித்தியானந்தாவின் வலையில் அமெரிக்க நகரங்கள் வீழ்ந்தது எப்படி என்பது தான்.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
சித்திரை திருவிழா : 'அந்த மனசு தான் சார் கடவுள்' - பிரசாதம் வழங்க சொன்ன நித்தியானந்தா
Nithyananda

ஐக்கிய நாடுகள் சபையில் கைலாசா உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபையில் கைலாசா தேசத்தின் தூதர் விஜயப்ரியா நித்தியானந்தா மரியாதை நிமித்தமாக கனடா, வங்கதேசம், காம்பியா பொன்ற பல நாட்டு தூதர்களைச் சந்திக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ‘கைலாசா' தனி நாடு தானோ என்கிற பிம்பத்தைக் கொடுக்கும் வகையிலான பதிவுகள் சமூக வலைதளத்தங்களில் நிரம்பியுள்ளன.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாக்க வழிமுறைகள் என்ன?

கற்பனை தேசமா ‘கைலாசா’?

கைலாசா என்கிற தேசம் ஒரு எதார்த்த நாடு அல்ல. எல்லை வரையறைகளே இல்லாத கற்பனை தேசம் அது என்பது போன்ற விமர்சனங்களுக்கு நித்தியானந்தா தரப்பு பதிலளித்துள்ளது.

பண்டைய அறிவார்ந்த இந்து நாகரிக தேசத்தின் மீட்டுருவாக்கமே கைலாசா தேசம் என்கிறது நித்தியானந்தா தரப்பு. சாவரின் ஆடர் ஆஃப் மால்ட்டா (Sovereign Order of Malta) போல எல்லைகளே இல்லாத சேவை அடிப்படையிலான தேசம் இது என்றும், உலகம் முழுவதும் பல நாடுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படுவதாகவும் நித்தியானந்தா தரப்பு விளக்கம் கொடுத்துள்ளதாக பிபிசி தமிழ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகில் வேற்றுமைகள், பேதங்கள் எதும் இல்லாமல் உலக அமைதி என்பதையே இலக்காக வைத்துக் கொண்டு நித்தியானந்தா உழைப்பதாகக் கூறுகிறார்கள் அவரது சீடர்கள்.

Nithyananda: 30 அமெரிக்க நகரங்களுடன் டீல் போட 'கைலாசா': இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?
நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com