அமெரிக்காவில் தேர்தல் வருவதனால் வாக்குகளை சேகரிக்கும் ஸ்டன்ட்களில் இறங்கிவிட்டனர் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள்.
அப்படி குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாலண்டினா கோம்ஸ் என்ற அந்த பெண் வேட்பாளர் LGBTQ சம்பந்தப்பட்ட புத்தகங்களை எரித்து, "நான் மாநிலச் செயலாளர் ஆனவுடன் இந்த சீர்ப்படுத்தும் (Grooming) புத்தகங்களை இப்படித்தான் அழிப்பேன்" எனப் பேசியுள்ளார்.
அவர் எரித்த புத்தகங்கள்:
'Queer: The Ultimate LGBTQ Guide for Teens'
'Naked: Not Your Average Sex Encyclopedia.'
இந்த 24 வயது பெண், பழமைவாதிகளின் வாக்குகளைப் பெற இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே LGBTQ மக்கள் தங்களது உரிமைகளைப் பெற போராடி வரும் நிலையில் இதுபோன்ற வெளிப்படையான எதிர்ப்புகள் வேதனையளிப்பதாக இணையத்தில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளி வேட்பாளர் விவேக் ராமசாமி திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust