LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை LGBTQ சமூகத்தவர் என அடையாளப்படுத்திக்கொள்வது குற்றம் என புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியுள்ளது. தன்பாலின உறவை ஊக்குவிப்பதையும், உறவில் ஈடுபடுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது
LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?
LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?Twitter
Published on

தன்பால் ஈர்ப்பு போன்ற LGBTQ பாலினத்தவர்களாக காட்டிக்கொள்வது கிரிமினல் குற்றம் என அறிவித்திருக்கிறது உகாண்டா அரசு.

இது தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது என மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

தன் பாலின ஈர்ப்பாளர்களை எதிர்க்கும் நாடுகளில் ஒன்று உகாண்டா. இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் உறவு சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், இச்சமூகத்திற்கு எதிராக புதிய கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது உகாண்டா அரசு.

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை LGBTQ சமூகத்தவர் என அடையாளப்படுத்திக்கொள்வது குற்றம் என புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியுள்ளது. தன்பாலின உறவை ஊக்குவிப்பதையும், உறவில் ஈடுபடுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.

இச்சட்டத்தை மீறினால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 20 அண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும், குற்றவாளி எச் ஐ வி பாசிட்டிவ் ஆக இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச தண்டனைக்குரிய குற்றமாக அது கருதப்படும்.

“தன்பாலின ஈர்ப்பாளர்கள் பாரம்பரியத்தை அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை கிரிமினல் குற்றம் என அறிவித்தது சரியான நடவடிக்கை” என சட்டத்தை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?
Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

இச்சட்டத்தை இயற்றிய உகாண்டா அமைச்சர் டேவிட் பஹாட்டி கூறுகையில், "ஏற்கனவே 30 ஆப்பிரிக்க நாடுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவை தடை செய்திருக்கின்றன. தன்பாலினத்தவர்கள் தங்களை lgbtq சமூகம் என அடையாளப்படுத்திக்கொள்வதை குற்றமாக்கும் சட்டம் உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்

மேலும் இது தங்கள் குழந்தைகளின் எதிர்காலததை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட மசோதா எனவும், தேசத்தின் இறையாண்மை பற்றியது எனவும் டேவிட் பஹாட்டி கூறியிருக்கிறார்.

LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?
Pride Month: மெக்சிகோவில் பிரமாண்டமாக நடைபெற்ற 100 தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்

தற்போது இந்த மசோதா உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் நீண்ட காலமாகவே lgbtq சமூகத்தை எதிர்த்து வந்தவர். 2013 lgbtq சமூகத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார்.

LGBTQ: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை! உகாண்டா அரசு இயற்றிய புதிய மசோதா - ஏன்?
LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com