கனடா : ஆர்டிக் பகுதியில் எரிநட்சத்திரம் மோதிய பள்ளம் - என்ன ஆனது தெரியுமா?

ஒரு பெரும் வட்ட வடிவ பள்ளத்தாக்கில் பளிங்கு போல நீர் நிரம்பி இருக்கும். ஒரு காலத்தில் இங்கு வைரம் தேடும் ஆட்கள் வந்தார்கள். ஆனால் இந்த இடம் அதன் ஆழமான நீரில் பல கதைகளை, மர்மங்களை வைத்திருக்கின்றது.
பள்ளத்தக்கு
பள்ளத்தக்குTwitter

கனடாவின் பெரிய மாநிலமான கியூபெக்கின் வடக்கே இருக்கும் பகுதி நூனாவிக். கியூபெக் மாநிலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை விட பெரியது. பிரிட்டனை விட இரண்டு மடங்கு பெரியது.

நூனாவிக்கிற்கு விமானப் பயணம் செய்வது ஒரு சாகசம் போன்றது. அங்கே விமானங்கள் மிகுந்த கவனத்துடன்தான் தரையிறங்கும். பல முறை அவசரக்கால அலாரங்களுடன் பயணிகளுக்கு ஒரு திகிலை ஏற்படுத்தியவாறுதான் விமானம் மிகக்குறுகிய ஓடுபாதையில் இறங்கும்.

8 -வது அதிசயம்

1950 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி உலகளவில் ஊடகங்களால் பிரபலமானது. மற்றும் உலகின் எட்டாவது அதிசயமாகக் குறிப்பிடப்பட்டது. காரணம் இப்பகுதியில் இருக்கும் காடுகள் அல்ல. அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானமும் அல்ல. இது ஒரு தனித்துவமான நிலப்பரப்பு. உலகில் எங்கேயும் காண முடியாத அதிசயம்.

கடும் குளிர்காலத்தில் இங்கு வரும் அனைவரும் தோல் வியாதிகளால் பாதிக்கப்படுவர். கோடைக் காலம்தான் இந்த இடத்தை பார்ப்பதற்கு வசதியானது.

பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்குPixabay

ஒரு பெரும் வட்ட வடிவ பள்ளத்தாக்கில் பளிங்கு போல நீர் நிரம்பி இருக்கும். ஒரு காலத்தில் இங்கு வைரம் தேடும் ஆட்கள் வந்தார்கள். ஆனால் இந்த இடம் அதன் ஆழமான நீரில் பல கதைகளை, மர்மங்களை வைத்திருக்கின்றது.

இந்த வட்ட வடிவ பள்ளத்தின் விட்டம் 3.5 கிமீ. சுற்றளவு 10 கிமீ. இப்படி ஒரு பெரும் கிணறு போன்ற வடிவத்தை நீங்கள் உலகில் எங்கும் பார்க்க முடியாது. இது ஒரு கச்சிதமான மிகச்சரியான வட்டவடிவத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வட்டத்தில் ஒரு பிசிறு கூட இல்லை. வானிலிருந்து பார்த்தால் ஒரு மாபெரும் கண்ணாடி வட்டத்தைப் போன்று தோன்றும். சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு எரி நட்சத்திரம் இங்கே மோதியதன் விளைவாக இந்த பிரம்மாண்டமான பள்ளம் தோன்றியது.

இந்தப் பள்ளத்தின் அருகே சில கிமீ தொலைவில் விமானம் இறங்கும். இங்குதான் பிங்குவாலிட் தேசிய பூங்காவின் விருந்தினர் விடுதி இருக்கிறது. அதில் சூரியசக்தியின் மூலம் இயங்கும் ஐந்து அறைகள் மட்டும் இருக்கின்றன.

போர் விமானிகள் இந்தப் பள்ளத்தை ஒரு வழிகாட்டி அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் போர் முடியும் வரை அவர்கள் அதை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்கிறார் பியர்ஃபிலி.

போரில் பயன்படுத்தப்பட்ட வட்டம்

விமானத்தில் உடைமைகளை நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இங்கே அதைச் சுமப்பதற்கு பணியாளர்கள் இல்லை. அங்கே மானுடவியலில் ஆர்வம் கொண்ட பிரெஞ்சு கலாச்சார மற்றும் புவியியலாளருமான பியர் ஃபிலி குடியிருக்கிறார். அவர் 40 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதிக்கு வந்துவிட்டார். இங்கேயே ஒரு பெண்ணை மணம் முடித்து வாழ்கிறார்.

அவரிடம் பிங்குவாலிட் பள்ளத்தின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படம் ஒன்று இருக்கிறது. அது 1943 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க விமானப்படை அதிகாரியால் விண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போதுதான் மேற்கத்திய உலகிற்கு இப்படி ஒரு பள்ளம் இருப்பது தெரியும். போர் விமானிகள் இந்தப் பள்ளத்தை ஒரு வழிகாட்டி அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் போர் முடியும் வரை அவர்கள் அதை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்கிறார் பியர்ஃபிலி.

இது உலகிற்குத் தெரிய வந்தபோது முதலில் வந்த கனடிய நபர்கள் இந்த நீர் நிரம்பிய பள்ளம் ஒரு எரிமலையால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பினார்கள். அதற்குள் வைரங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்த்தார்கள். கனடாவின் அருங்காட்சியக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள். ஆனால் பின்னர் இந்தப் பள்ளம் எரிமலையால் உருவாக்கப்பட்டது என்ற கோட்பாடு ரத்து செய்யப்பட்டது.

பள்ளாத்தாக்கு
பள்ளாத்தாக்குPixels

ஹிரோஷிமா, நாகசாகியை விட பலம்வாய்ந்த தாக்குதல்

தற்போது இது ஒரு விண்கல்லால் மோதி ஏற்பட்ட பள்ளம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பிங்குலூயிட்டியிலிருந்து சுமார் 2.5கிமீ தொலைவில் அமைந்துள்ள மனார்சுலிக் ஏரியின் மீது சூரியன் அஸ்தமிக்கும். அப்போது பள்ளத்தின் விளிம்பு இளஞ்சிவப்பில் மின்னுவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

எரிநட்சத்திரக் கல் இங்கே மோதிய போது ஏற்பட்ட இப்பள்ளத்தின் ஆழம் 400 மீட்டர் ஆகும். கிட்டத்தட அரை கிமீ. இந்த தாக்குதல் என்பது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுக்குண்டை விட 8,500 மடங்கு வலிமையானதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்யூட்கள்

மேற்கத்தியர்கள் வைரங்களைத் தேடி இங்கு வருவதற்கு முன்பே ஆர்டிக் பழங்குடி மக்களான இன்யூட்கள் இந்த பள்ளத்தைப் பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் அதை நூனாவிக்கின் படிகக் கண் என்று அழைத்தனர். உண்மையில் அந்த வட்ட ஏரியைப் பார்ப்பதற்கு அந்தப் பெயர் பொருத்தமாகவே இருக்கிறது. வருடத்திற்கு 6 முதல் 8 வாரம் வரைதான் இங்கே நீர் திரவப்பொருளாக இருக்கும். மற்ற மாதங்களில் பனிக்கட்டியாக இருக்கும்.

பள்ளத்தக்கு
விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து - காரணம் என்ன?
இந்த நிலப்பரப்பு ஒரு உயிருள்ள புத்தகம், அதைப் படிக்க நேரம் ஒதுக்கினால் நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை நிறைய உள்ளன
பியர்ஃபிலி

இந்தப் பள்ளத்தின் நீர் மழையால் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மேலும் உலகின் இரண்டாவது தூய்மையான நீர் என்றும் கருதப்படுகிறது. இன்யூட் மக்கள் இப்பகுதிக்கு 1000 வருடங்களுக்கு முன்பே வந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்றும் புரியவில்லை.

"இந்த நிலப்பரப்பு ஒரு உயிருள்ள புத்தகம், அதைப் படிக்க நேரம் ஒதுக்கினால் நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை நிறைய உள்ளன" என்கிறார் பியர்ஃபிலி. சமீப ஆண்டுகளாக மக்கள் அப்படி இங்கே வருகிறார்கள்.

2007 ஆம் ஆண்டில் கியூபெக்கில் உள்ள லாவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு இங்கே வந்தது. குளிர்காலத்தில் தண்ணீருக்கு அடியிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தது. இதன் மூலம் காலநிலை மாற்றத்தின் கடந்த கால அத்தியாயங்கள், எரிநட்சத்திரத்தின் மோதல் சுற்றுச்சூழல் அமைப்புக்களை எப்படிப் பாதித்தன என்பதை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

பள்ளத்தக்கு
நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

இங்கு வருகின்ற பயணிகள் உலகின் மிகத்தூய்மையான குடிநீரை தமது பாட்டில்களில் நிரப்பி எடுத்துச் செல்கிறார்கள். இந்த குளிர் பகுதியைச் சேர்ந்த காரிபூ விலங்கினங்கள் (மானைப் போன்ற தோற்றமுள்ளவை) பெரும் மந்தைகளாகச் சுற்றித் திரிகின்றன. அவற்றைக் கடந்துதான் இந்த இடத்திற்குச் சென்று திரும்ப வேண்டும்.

நிலவில் காணப்படும் பள்ளம் போல இப்பள்ளம் தோற்றமளிக்கிறது. இந்தப் பள்ளத்தின் அடி ஆழம் வரை விஞ்ஞானம் கண்டுபிடிக்க வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய கதைகள், உண்மைகள் நிறைய உள்ளன. வாழ்வில் ஒரு முறை இந்த பள்ளத்தைப் பார்த்தால் நாம் நமது பூமி அண்டவெளியுடன் இணைந்திருப்பதை நேரடியாக உணரலாம். அங்குச் சென்றால் அந்த நீரைப் போன்ற நமது மனதும் சுத்தமாகும். நமது அழுக்குகளை அகற்றும் வலிமை அங்கே காத்திருக்கிறது.

பள்ளத்தக்கு
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com