உலக அளவில் நடைபெறும் டெக் நிகழ்வுகளில் ஆண்டுதோறும் முக்கியத்துவம் பெற்று வருகிறது ஆப்பிளின் லான்ச் ஈவண்ட். Apple Lunch Event 2023 நேற்று நடைபெற்று முடிந்தது.
நேற்றைய நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், ஆப்பிள் ஐபோன் 15 வெளியீடு உட்பட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஐபோன் 15 தான் அனைவரையும் ஈர்த்தது என்றால் டெக்கீஸ் கூட எதிர்பார்க்காத சில விஷயங்களும் அரங்கேறியது. ஒட்டுமொத்தமாக ஐபோனின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாகவும் அவை இருந்தது.
நேற்றைய நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் கூறிய 5 முக்கிய அறிவிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 வெளியிடப்பட்டது. ஆப்பிள் 14ல் எக்ஸ்குளூசிவாக அறிமுகப்படுத்தப்பட்ட டைனமிக் ஐலேண்ட் என்ற வசதி இதிலும் உள்ளது.
முதன்முறையாக ஆப்பிள் மொபைலில் USB -C டைப் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளசில் 'A16' பயோனிக்' சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ப்ரோ வெர்ஷன்களில் 'A17' பயோனிக்' சிப் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரோ மற்றும் ப்ரோமேக்ஸ் மாடல்கள் டைட்டானியத்தில் பில்ட் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக ஐபோன்களில் இருக்கும் மியூட் பட்டனுக்கு பதிலாக ஆக்ஷன் ஸ்விட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நம் விருப்பத்துக்கு ஏற்றபடி அமைத்துக்கொள்ளலாம்.
மேலும் மொபைல் இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறது. இதுவும் 48 எம்.பி மெயின் கேமராவுடன் வருகிறது. 5x டெலி போட்டோகேமராவும் உள்ளது.
அடுத்ததடுத்து சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் வருவதையும் நேற்றைய நிகழ்வில் உறுதி செய்துள்ளனர். ஐஓஎஸ் 17, வாட்ச் ஓஎஸ் 10, ஐபாட் ஓஎஸ் 17 ஆகிய சாஃப்ட்வேர் அப்டேட்கள் செப்டம்பர் 18ம் தேதி வருகின்றன.
மேக் ஓஎஸ் சொனோமா செப்டம்பர் 26ம் தேதி வெளியாகிறது.
வாட்சில் பேட்டரி லைஃப் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அல்ட்ரா வைட்பேண்ட் சிப் மற்றும் எஸ்9 புராசசர் கொடுக்கப்பட்டுள்ளது.
நம் இரண்டு விரல்களை தட்டுவதன் மூலம் கால் அட்டன் செய்யலாம், அலாரத்தை ஸ்னூஸ் செய்யலாம். இந்த வசதிதான் சிறப்பான சம்பவம்!
இன்று முதல் ஆப்பிள் வாட்ச் 9 ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 22ம் தெதி இவை டெலிவரி செய்யப்படும்.
ஆப்பிளின் SOS வசதிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன. AAA நிறுவனத்துடன் இணைந்து இந்த சாலையோர உதவி கொண்டுவரப்பட்டுள்ளது.
எப்போதாவது சாலையில் உதவியில்லாமல் மாட்டிக்கொண்டால், உங்கள் பிரச்னையை ரோட்சைட் உதவிக்கு மெசேஜ் செய்தால் போதும். தேவையான உதவி தேடி வரும்.
ஐபோன் வாங்குபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust