Argentina : அர்ஜென்டினா வாழ்வதற்கு சொர்க்கமா, நரகமா? - ஒரு பயணம்

இங்கு உள்ள கலாச்சாரம் தனித்துவமானது. மனிதர்கள் வாழ்வதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அர்ஜென்டினா அனைவரையும் கவரும் நாடாக கருதப்படுகிறது.
Argentina
Argentina Twitter
Published on

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போடியில் அதிக அளவில் கால்பந்து ரசிகர்களால் சொல்லப்பட்ட பெயர் அர்ஜென்டினா.

கால்பந்து ரசிகர்களின் விருப்பமான அணியாக அர்ஜென்டினா இருக்கிறது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மெஸ்ஸியின் பெயரும் மக்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராக உள்ளது .

அர்ஜென்டினா நாடு குறித்த சில விஷயங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

அர்ஜென்டினா உலகின் எட்டாவது பெரிய நாடு என்றாலும், மற்ற பெரிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மக்கள் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது.

இங்கு உள்ள கலாச்சாரம் தனித்துவமானது. மனிதர்கள் வாழ்வதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அர்ஜென்டினா அனைவரையும் கவரும் நாடாக கருதப்படுகிறது.

அர்ஜென்டினாவில் வாழ்வதில் உள்ள சாதக பாதகங்களை தற்போது பார்க்கலாம்

அர்ஜென்டினாவின் சிறப்பம்சங்கள்

கலாச்சார பன்முகத்தன்மை

இத்தாலிய மற்றும் ஜெர்மன் செல்வாக்கு உள்ள நாடான அர்ஜென்டினாவில் , சில கலாச்சாரங்கள் உள்ளது. குறிப்பாக இங்கு உள்ள பழங்குடியின மக்களும் தங்களுக்கென ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகியிருக்கிறார்கள்.

ஆகவே இங்கு பல்வேறு சடங்குகளும், நிகழ்வுகளும் இருக்கும் என கூறப்படுகின்றது.

உணவு

அர்ஜென்டினா மக்கள் அதிக அளவில் இறைச்சியினை விரும்பி உண்பதாக கூறப்படுகிறது. உலக அளவில் மாட்டிறைச்சி இங்கு அதிகம் தயாரிக்கபடுவதாக கூறப்படுகிறது.

இங்கு இறைச்சி மட்டுமல்ல, பாஸ்தா மற்றும் சில பழங்களும் மலிவாக கிடைக்கும்.

சுகாதரத்திற்கு முன்னுரிமை

அர்ஜென்டினாவை பொறுத்தவரை சுகாதரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது.

குறிப்பாக நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் திடீரென நோய்வாய்ப்படும் பட்சத்தில், சில விதிமுறைகளின்படி மருத்துவம் இலவசம் என கூறப்படுகிறது

மேலும் இங்குள்ள மருந்துகள் அமெரிக்காவில் உள்ள விலையினை விட குறைவாக இருக்குமாம். அதே சமயம் தரமானதாகவும் இருக்கும்.

இது தவிர உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு தனி நபர் மன நல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் இங்கு அதிகமாக உள்ளனர்.

இயற்கை அதிசயங்கள்

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியான படகோனியா பகுதியில் ஒரு தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள ஆண்டிஸ் மலை பகுதியும் பரந்த புல்வெளிகளும் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

அர்ஜென்டினாவில் வாழ சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்

மெதுவான வாழ்க்கை முறை

நீங்கள் அமெரிக்காவில் 20 நிமிடங்களில் செய்யும் ஒரு வேலையை இங்கு செய்ய சரசரியாக ஒரு மணிநேரமாகும்.

இங்கு உள்ள சூழ்நிலையானது பரபரப்பான இடத்தில் இருந்து வந்தவர்களுக்கு சலிப்பை கொடுக்கும். நிசப்தமும் சில நேரங்களில் வெறுத்து போகும்.

பண பரிவர்த்தனை

நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால் உங்கள் பணத்தை பெறுவது இங்கு சிரமமாக இருக்கும். குறிப்பாக இங்கு உள்ள ஏடிஎம்கள் அதிக தொகையினை கட்டணமாக வசூலிக்கின்றன.

Argentina
2021 கால்பந்து விளையாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் | Football Rewind 2021

நிலையில்லாத பொருளாதாரம்

அர்ஜென்டினாவில் பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருக்கும். டாலர் மதிப்பு திடீரென குறையும், சில நேரம் உயரும்.

சில சமயம் இங்கு பணவீக்கமானது 30 சதவீதத்தை எட்டும் என கூறப்படுகிறது. அதே சமயம் அர்ஜென்டினாவில் வேலை கிடைப்பதும் கடினம் என்று கூறப்படுகிறது. அர்ஜென்டினா நாணயத்தில் ஊதியம் மிக குறைவாக இருக்கும்.

பெரிய நாடு

அர்ஜெண்டினா மிகப்பெரிய நாடு என்பதால், நீங்கள் மியாமியிலிருந்து அர்ஜெண்டினா செல்ல 10 மணிநேரமாகும். குறிப்பாக இங்கு உள்ள இடத்தை பற்றி முன்பே தெரிந்து வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் சிக்கலில் மாட்டி கொள்வீர்கள்.

Argentina
FIFA 2022 கத்தார் : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அரங்கேறிய 5 மறக்க முடியாத தருணங்கள்!

அதிக வரி

அர்ஜென்டினாவில் அரசாங்கத்தால் பல சேவைகள் கொடுக்கப்பட்டாலும் , வரிகளும் மிக அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக உங்கள் வருமானத்தில் 35 சதவிகிதம் வரிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

குழப்பமான அரசியல்

அர்ஜென்டினாவில் பொருளாதாரமும் அரசாங்கமும் மிகவும் நிலையற்றவை. ஒரு காலத்தில், அர்ஜென்டினா உலகின் வலிமையான பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது 1940 பிறகு நிலை மாறி விட்டது.

அரசு விதிமுறைகள் அடிக்கடி அங்கு மாற்றமடைவதால், தெருக்களில் அடிக்கடி போராட்டங்களும் நடக்கும்.

Argentina
Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com