இலங்கை நெருக்கடி : அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய நண்பர் தீவு தேசத்தை விட்டு வெளியேறினாரா?

இலங்கை அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய சகாவான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி இலங்கையைவிட்டு ரகசியமாக வெளியேறினார் என டெய்லி மிர்ரர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டபயாவுடன் நிஸ்ஸங்க சேனாதிபதி
கோட்டபயாவுடன் நிஸ்ஸங்க சேனாதிபதி Facebook
Published on

இலங்கை அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய சகாவான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி இலங்கையைவிட்டு ரகசியமாக வெளியேறினார் என டெய்லி மிர்ரர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை Sri Lanka Guardian தளமும் உறுதிப்படுத்தி உள்ளது.

Pexels

மாலத்தீவுக்கு பயணம்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி - மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மாலதீவுக்கு சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

NewsSense தளத்தால் இதனைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கோட்டபயாவுடன் நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை : மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜிநாமா - மீளுமா தீவு தேசம்?
கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையம்Facebook

செயலிழந்த கேமிரா

அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கேமராக்களும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்திலிருந்து புறப்பட்ட அவர் UL102 என்ற விமானத்தில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பின் கோளாறு குறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டபயாவுடன் நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை : போரில் வென்று பொருளாதார நெருக்கடியில் தோற்கிறதா தீவு தேசம்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com