இந்த பிரபஞ்சத்தில் உயிர் வாழ தகுதியான கோளாக கருதப்படும் பூமியின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுள்ளது. இந்த தகவலை ஐநா வெளியிட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா என்ற இடத்தில், நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு 1.29க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. உலகின் 800 கோடியாவது குழந்தை இது தான் என மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருக்கிறது. வினிசா என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை பிறந்ததும், மருத்துவமனை நிர்வாகம் இந்த நிகழ்வை கொண்டாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 2022 நவம்பர் 15 ஆம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று தெரிவித்திருந்தது. 700 கோடியிலிருந்த மக்கள் தொகை, 800 கோடியாக மாற 12 ஆண்டுகள் எடுத்துள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.
1950லிருந்து மக்கள் தொகை விகிதம் கணிசமாகவே அதிகரித்து வந்துள்ளது எனவும், 2020ல் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான அளவை அதிகரிப்பு விகிதம் தொட்டதாகவும் Annual World Population Project தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு சீனாவின் கருவுறுதல் விகிதம் 1.16 சதவிகிதமாக இருந்தது. கொரோனா தொற்று பரவலின் தாக்கத்தால் இந்த ஆண்டு சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும், அடுத்த ஆண்டு குறைய தொடங்கும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக கூறியுள்ளனர். இதனால், தம்பதிகள் ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியிருந்தது.
ஐநாவின் கூற்றுப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் சீனாவை விட அதிகமாகும் எனவும், உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இந்திய முதலிடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உலக மக்கள் தொகை 2030ல் 8.5 கோடி, 2050ல் 9.7 கோடியை அடையும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust