பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் இத்தனை சலுகையா? வைரலாகும் மருத்துவரின் அடடே கதை!

சில குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்தால் அதை ஏற்க மறுக்கின்றனர். ஒரு சிலர் குழந்தையை பார்க்கக்கூட வர மறுத்தனர். இதை பார்த்துவிட்டு எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்தோம்" என்கிறார்.
Dr Ganesh Rakh
Dr Ganesh RakhTwitter
Published on

தன் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால், மருத்துவ கட்டணங்கள் எதுவும் இல்லாமல், இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார், பூனேவை சேர்ந்த மருத்துவர்.

மத்திய அரசு பெண் சிசு கொலைகளை தடுக்கவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் 'பேட்டி பச்சாவ்' திட்டத்தை அறிமுகப்படுதியது. அதன் ஒரு பகுதியாக பூனேவை சேர்ந்த மருத்துவர் கணேஷ் ராக் என்பவர் இந்த சேவையை செய்து வருகிறார்.

Dr Ganesh Rakh
நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர் - ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

இவர் பூனேவின் ஹடப்ஸர் என்ற இடத்தில் மெடிகேர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வருகிறார். மகப்பேறு மருத்துவமனையான இங்கு பிரசவத்திற்கு ஏராளமான பெண்கள் வருகின்றனர்.

அப்படி வருபவர்களுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஆகும் மொத்த மருத்துவ செலவையும் அவரே ஏற்றுக்கொள்கிறார். அதாவது பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு பிரசவம் இலவசம்.

கடந்த 11 வருடங்களாக இந்த மருத்துவ சேவையை ஆற்றி வருகிறார் டாக்டர் கணேஷ். இதுவரை 2,400 பேருக்கு இலவசமாக பிரசவங்களை பார்த்துள்ள இவர் அந்த மகிழ்ச்சியான தருணங்களை மருத்துவமனையில் பார்ட்டி வைத்தும் கொண்டாடியுள்ளார்.

"பெண் குழந்தைகள் பிறந்தால் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, பெற்றோருக்கும் மரியாதை செலுத்தி வந்துள்ளோம். இந்த 11 வருடங்களில் எங்கள் மருத்துவமனையில் சுமார் 2430 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் நாங்கள் விமர்சையாக கொண்டாடியுள்ளோம்"

இது தவிர பிரசவம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் தாய்மார்களை வீட்டில் பத்திரமாக கொண்டு சேர்க்க மருத்துவமனை சார்பில் ஆட்டோக்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

மருத்துவர் கணேஷ் இது குறித்து கூறியதாவது:

"ஒரு சில குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்தால் அதை ஏற்க மறுக்கின்றனர். ஒரு சிலர் குழந்தையை பார்க்கக்கூட வர மறுத்தனர். இதை பார்த்துவிட்டு எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்தோம்" என்கிறார்.

Dr Ganesh Rakh
மரியாதையாக பேசினால் டீ விலை குறைவு; கஃபேயின் அடடே ஆஃபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com