இலங்கை: தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ரூ.2 கோடி கேட்கும் நீதிமன்றம்| Latest Update

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவ நட்பு நாடான இந்தியா முன்வந்தது. 7600 கோடி ரூபாய் இலங்கைக்குக் கடனாக வழங்க ஒப்பந்தமிட்டது இந்தியா. அத்துடன் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கியும் உதவி வருகிறது.
Fishermen
FishermenTwitter
Published on

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிக்கிக்கொண்ட மீனவர்களை விடுவிக்கப் பிணைத் தொகை கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.


இலங்கையில் போர், கொரோனா பெருந்தொற்று, வரிக் குறைப்பு மற்றும் மோசமான நிதி மேலாண்மை என பல்வேறு காரணங்களால் கடன் அதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கற்பனைக்கு எட்டாத அளவு உயர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நலிவுற்ற மக்கள் இரு வேளை உணவுக்கே அல்லல்ப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை அதிக விலையும் பெருமளவு தட்டுப்பாட்டிலும் உள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். GO HOME GOTA என்ற பதாகைகளுடன் வீதிகளில் மக்கள் போராடிவர, ராஜிநாமா செய்யப்போவதில்லை எனக் கூறியிருக்கிறார் அதிபர் ராஜபக்‌ஷே. ராஜபக்‌ஷே சகோதரர்களைச் சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும் என இலங்கை மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

இலங்கை
இலங்கைNewsSense

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவ நட்பு நாடான இந்தியா முன்வந்தது. 7600 கோடி ரூபாய் இலங்கைக்குக் கடனாக வழங்க ஒப்பந்தமிட்டது இந்தியா. அத்துடன் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கியும் உதவி வருகிறது.

தீவிர பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்குப் பணம் மிக முக்கியத்தேவையாக இருக்கிறது.

இந்தியாவிலிருந்து மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால்

பிடிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்படுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இம்முறை இலங்கையில் இருக்கும் மீனவர்களை மீட்க இந்திய மதிப்பில் தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Fishermen
இலங்கை : தொடரும் இருள், சரியும் நம்பிக்கை - Latest 10 Updates

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிறைபிடித்தனர்.

அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களின் வழக்கு இலங்கையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி வரை மீனவர்களைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்கள் சிறையிலிருந்து வெளியே வர நினைத்தால், அவர்கள் தலா 2 கோடி ரூபாய் கொடுத்தால், அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Fishermen
இலங்கை : வலிமை திரைப்பட பாணியில் போராட்ட களத்திற்கு வந்த Bikers - என்ன நடந்தது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com