இந்தோனேசியா : பாலியில் யாரும் மலை ஏறக் கூடாது - வித்தியாசமான தடை விதிக்க என்ன காரணம்?

தற்போது பாலி தீவில் உள்ள மலைகளில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Bali bans all tourism activities on mountains and volcanoes
Bali bans all tourism activities on mountains and volcanoes Twitter

இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு தீவு தான் பாலி. இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது.

நாடு அதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவற்றில் புகழ்பெற்றிருக்கிறது. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. பலரும் இந்த தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

தற்போது பாலி தீவில் உள்ள மலைகளில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியின் கவர்னர் வேயன் கோஸ்டர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த தடை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, உள்ளூர்வாசிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.

அமலில் இருக்கும் தடையை ஒழுங்குபடுத்த உள்ளூர் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Bali bans all tourism activities on mountains and volcanoes
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

பாலியின் 22 மலைகள் அனைத்திலும் இந்த தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலைகளின் புனித தன்மையை மீறியுள்ளனர். பொதுவில் நிர்வாண காட்சி, மலை ஓரங்களில் மரணம் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் ஆகியவை இவ்வாறு நடவடிக்கை எடுக்க முக்கிய காரணங்களாகும்.

அத்தகைய தடை சுற்றுலா நடவடிக்கைகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Bali bans all tourism activities on mountains and volcanoes
ஏலகிரி முதல் ஏற்காடு வரை - தமிழகத்தின் இந்த புகழ்பெற்ற டிரெக்கிங் பாதைகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com