பொதுவாகப் புலிகள் தான் இருக்குமிடத்திலிருந்து 20 கிலோமீட்டர் சுற்று வட்டாரம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியது. அந்த சுற்றுவட்டாரத்துக்குள் சுற்றித் திரிந்து தனது எல்லையைக் காத்துக்கொள்ளும்.
இனப் பெருக்கக் காலத்தில் இணைத் தேடுதலின் போது ஆண் புலிகள் இன்னும் அதிக தூரம் வரை அலைந்து திரியும். அவ்வாறு சுந்தராவன காடுகளில் அலைந்து திரியும் புலிகள் அடிக்கடி பங்களாதேஷ் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் வந்துவிடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனியாக அலையும் இந்த புலிகளின் வருகை கடந்த ஜனவரியிலிருந்து மட்டும் நான்கு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேற்குவங்க வனத்துறை அமைச்சர் ஜோதி பிரியா மாலிக், “இந்த புலிகள் இனப் பெருக்க காலமான நவம்பர் முதல் ஜனவரி வரை இது போல சுற்றித் திரிவது இயல்பு தான். ஆனால் இந்த புலிகள் இப்போது காட்டிற்கு அருகிலிருக்கும் கிராமங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கியிருக்கின்றன.” என்றார்.
காட்டிற்கு அருகிலிருக்கும் மதுரகண்ட் கிராமத்தில் ஒரு ஆண்புலி புகுந்து இரண்டு பசுக்களையும் ஒரு எருமையையும் கொன்ற சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சுந்தராவன காடுகளிலிருக்கும் புலிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் சோமா சோர்கெல் என்பவர் புலிகள் கிராமங்களுக்குள் நுழைவது குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, “இனப்பெருக்க காலத்தில் பெண் புலிக்காக ஆண் புலிகள் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இந்த சண்டையில் தோற்கும் ஆண் புலி அதன் இடத்தை காலி செய்துவிடும். அப்படி இடப் பெயர்வில் ஈடுபடும் போது அவை கிராமங்களுக்குள் நுழைகின்றன” என்றார்.
பிஸ்வஜீத் தாஸ் எனும் வனத்துறை அதிகாரி கூறுகையில், “சண்டையில் காயப்படும் ஆண் புலியால் காட்டில் வேட்டையாடி உணவருந்துவது இயலாத ஒன்று. உடல் அளவில் சோர்ந்து போகும் புலிகள் எளிதாக உணவருந்துவதற்காகக் கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன” என்றார்.
சுந்தராவன காடுகளில் கடந்த 2014 ம் ஆண்டு 76ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2020-21 கணக்கெடுப்பின் படி 96ஆக உயர்ந்திருக்கிறது. இங்கிருக்கும் புலிகள் இந்தியா - பங்களாதேஷ் இரண்டு நாட்டிலும் வளம் வருகின்றன.
மனிதர்களுக்கு தான் சர்வதேச எல்லை எல்லாம், புலிகளுக்கு இல்லை!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust