"129 முதல் 139 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த இச்தியோசர் எனப்படும் நீர்வாழ் உயிரினத்தின் படிமம் சிலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இத்தனை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கர்ப்பமான இச்தியோசர் இதுதான்.
சிலியின் படகோனியா பகுதியில் உள்ள தின்டால் பகுதியில் பனிப்பாறைக்குள் மிகவும் முழுமையான டைனோசர் புதைபடிமங்களில் ஒன்றைப் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 90 முதல் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் சுற்றித் திரிந்ததாகக் கருதப்படும் இந்த இச்தியோசர் படிமத்திற்கு "ஃபியோனா" என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த அரிய இச்தியோசர் படிமம் குறித்து, GAIA அண்டார்டிக் ஆராய்ச்சி மைய பழங்காலவியல் நிபுணர் பார்டோ கூறுகையில், “இது விஞ்ஞானிகளுக்கு இச்தியோசர்களின் இனப்பெருக்கம், கரு வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். எனவே இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சிக்கலான பனிப்பாறை இடுக்கில் கிடைக்கப்பெற்ற இந்த படிமத்தைக் கொண்டு வர 31 நாட்கள் ஆனது. 200 கிலோகிராம் உடைய அதன் எலும்புகளை மொத்தம் ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு வந்து சேர்த்தோம்” என்று கூறினார்.
இதுவரையில் தின்டல் பனிப்பாறையிலிருந்து மொத்தம் 23 இக்தியோசர் மாதிரிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இவையனைத்தும் தெற்கு சிலியில் உள்ள ரியோ செகோ இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp