Beach Tourism: நிலவொளியில் நீந்தலாமா? இரவில் மட்டும் நீச்சலுக்கு அனுமதி தரும் கடற்கரைகள்!

துபாய் முனிசிபாலிட்டி, கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்காக இரவு முழுவதும் நீச்சல் அடிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
Beach tourism: Enjoy night swimming at these three new beaches in Dubai
Beach tourism: Enjoy night swimming at these three new beaches in DubaiTwitter
Published on

கடற்கரை பொதுவாக அனைவரும் விரும்பக்கூடிய இடம். தனிமை விரும்பிகள் தொடங்கி குடும்பத்தினர்கள் ஒன்றாக வரும் இடமாகவும் கடற்கரை இருக்கிறது.

வெள்ளை மணலை கால்விரல்களால் தீண்டி நீல நிற வானத்தின் கீழே கரை ஒதுங்கும் அலைகளை ரசிக்க சொல்லியா தர வேண்டும்?

உலகெங்கிலும் பல வகையான கடற்கரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகிற்கு புகழ் பெற்றது. அந்தவகையில் இரவில் மட்டும் நீச்சலுக்கு அனுமதியளிக்கும் கடற்கரைகளைத் திறந்துள்ளது துபாய்.

கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில், துபாய் இரவு நீச்சலுக்காக மூன்று புதிய கடற்கரைகளைத் திறந்துள்ளது.

துபாய் முனிசிபாலிட்டி, கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்காக இரவு முழுவதும் நீச்சல் அடிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதற்காகவே இப்போது துபாயில் மூன்று அற்புதமான கடற்கரைகள் உள்ளன. அங்கு நீங்கள் இரவில் பார்வையிடலாம், நிலவொளியில் நீந்தி மகிழலாம்.

துபாய் முனிசிபாலிட்டி ட்விட்டரில் இந்த மகிழ்ச்சியான தகவலை வீடியோவுடன் பகிர்ந்துகொண்டது.

  • துபாயின் ஜுமைரா 2,

  • ஜுமைரா 3

  • உம் சுகீம் 1

ஆகிய 3 கடற்கரைகளில் இரவில் நீச்சலடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Beach tourism: Enjoy night swimming at these three new beaches in Dubai
”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன?

இங்கு துபாய் முனிசிபாலிட்டி நீந்துவதற்கு தேவையான அனைத்து சேவைகளையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

800 மீ நீளமுள்ள நீச்சல் கடற்கரைகள் அற்புதமான விளக்கு அமைப்பைக் கொண்டுள்ளன.

விளக்குகள் மக்களை எந்த நேரத்திலும் கடற்கரையில் நீந்த அனுமதிக்கின்றன. உள்ளமைப்பை காட்டவும், கடற்கரையில் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மின்னணுத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவில் கடற்கரைக்கு சென்று நீச்சல் செய்ய விரும்புவோருக்கு துபாய் நகராட்சி பல வசதிகளை இங்கு நிறுவியுள்ளது. இதனால் இந்த கடற்கரைகள் முற்றிலும் பாதுகாப்பானவை.

இந்த கடற்கரைகளில் நவீன மீட்பு மற்றும் இரவு நேரத்தில் நீச்சல் வீரர்களின் பாதுகாப்பிற்கான அவசர உபகரணங்களுடன் நன்கு பயிற்சி பெற்ற உயிர்காப்பாளர்களும் உள்ளனர்.

Beach tourism: Enjoy night swimming at these three new beaches in Dubai
ஆடைகளின்றி உலா வர அனுமதிக்கும் கடற்கரைகள் - ஐகானிக் நிர்வாண கடற்கரைகள் எங்கே இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com