கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் 400 செல்ஃபிகளை எடுத்த கரடி - எங்கே?

விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் 400 செல்ஃபிகளை எடுத்த கரடியின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bear takes 400 selfies with a sensory camera in USA’s Colorado
Bear takes 400 selfies with a sensory camera in USA’s ColoradoTwitter
Published on

செல்ஃபி மோகம் மனிதர்களை தாண்டி தற்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

கொலராடோவின் போல்டரில் உள்ள பூக்காவில் வனவிலங்கு நடவடிக்கைகள் மற்றும் அங்கு வாழும் விலங்குகளை படம்பிடிக்க அதிகாரிகள் ஒரு கேமராவை வைத்துள்ளனர்.

அங்கு கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை அவர்கள் கண்டறிந்தபோது, ​​மொத்தமுள்ள 580 படங்களில் 400 புகைப்படங்கள் கரடியால் எடுக்கப்பட்ட செல்ஃபிகள் என்று கண்டறிந்தனர்.

அங்கு சுமார் 46,000 ஏக்கர் நில அமைப்பில் ஒன்பது கேமராக்களை வைத்துள்ளனர்.

இந்த கேமராக்களுக்கு முன்னால் ஒரு விலங்கு அடியெடுத்து வைக்கும் போது ஆட்டோமெட்டிக்காக இயங்குகிறது. அது நிகழும்போது, ​​கேமராக்கள் ஒரு புகைப்படத்தை எடுக்கின்றன.

இரவில், கேமராக்கள் அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுத்திருக்கிறது.

Bear takes 400 selfies with a sensory camera in USA’s Colorado
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

வனவிலங்குகள் நிலப்பரப்பை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்ள கேமராக்கள் எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன என்று பூங்காக்களின் மூத்த வனவிலங்கு சூழலியல் நிபுணர் வில் கீலி கூறியிருக்கிறார்.

கரடி செல்ஃபி தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bear takes 400 selfies with a sensory camera in USA’s Colorado
உலகிலேயே சோகமான கொரில்லா இதுதான்! 32 ஆண்டுகளாக மாலில் சிறைப்பட்டிருக்கும் குரங்கு - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com