சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘பீர்' - எங்கு தெரியுமா?

NEWBrew என்கிற நிறுவனம் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் வடிகட்டப்பட்ட தண்ணீரிலிருந்து பீரை தயாரிக்கிறது. இதனை "பசுமையான பீர்" என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
Beer
Beer Pexels
Published on

தண்ணீரை சேமிப்பதில் சிங்கப்பூர் ஒரு முன்னோடி நாடாகும். அரசும் சரி, அங்கிருக்கும் நிறுவனங்களும் சரி தண்ணீரை சேமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.


அப்படி, சிங்கப்பூர் மதுபான ஆலை ஒன்று சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பீர் தயார் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது நகைச்சுவை அல்ல! உண்மையிலேயே NEWBrew என்கிற நிறுவனம் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் வடிகட்டப்பட்ட தண்ணீரிலிருந்து பீரை தயாரிக்கிறது. இதனை "பசுமையான பீர்" என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

Beer
Beer Pexels

உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பீர் தயாரிப்பதற்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுவதாலும், 90 சதவீத பானத்தில் H20 இருப்பதாலும், அதற்கு மாற்றாக இந்த மறுசுழற்சி முறையை அந்நிறுவனம் கடைப்பிடித்திருக்கிறது.


சிங்கப்பூர் நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த மறுசுழற்சி பீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை நிரூபிக்கப் பல சோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது. 95 சதவீதம் Tropical Blonde Ale” சுத்திகரிக்கப்பட்டு "அதி சுத்தமான" நீராக மாற்றுகிறது.

Beer
Beer Pexels

ஏற்கனவே, சிங்கப்பூரில் உள்ள குடிநீர் வாரியம் பல ஆண்டுகளாகக் கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக மாற்றும் பணியை நீண்ட நாட்களாகச் செய்து கொண்டிருக்கிறது.


சிங்கப்பூரின் சிறப்பு, கிராஃப்ட் பீர் (Craft beer) நிறுவனம், இந்த பீர் “வறுக்கப்பட்ட தேன் போன்ற சுவை” கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூரின் நீர் ஏஜென்சியின் கூற்றுப்படி, மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் இப்போது சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. இந்த எண்ணிக்கை 2060க்குள் 55 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Beer
சிங்கப்பூர் : இங்கு chewing gum தடை - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com