கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்?

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று துருக்கிய கால்பந்து அணிகளான பேசிக்டாஸ் அணிக்கும் ஆண்டல்யாஸ்போர் அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. இப்போட்டியில், ரசிகர்கள் பலரும் டெடி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் வீசியெறிந்தனர்.
கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்?
கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்? twitter

துருக்கி கால்பந்து அணியான பேசிக்டாஸ் கடந்த ஞாயிறு அன்று விளையாடிய ஆட்டத்தின்போது கால்பந்து ரசிகர்கள் மைதானத்திற்குள் டெடி பியர் பொம்மைகளை தூக்கி எறிந்தனர். இதனால் ஆட்டம் 4.17 நிமிடங்கள் நிறுத்தபட்டது.

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாக இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்?
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 4.17 மணியளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 என நிலநடுக்கம் பதிவானது. சிரியாவிலும் பயங்கரமான பூகம்பம் தாக்கியது. கிட்ட தட்ட 50,000 பேரை பலிவாங்கியது இந்த பூகம்பம்.

மோசமான கட்டுமான பணியே கட்டிடங்கள் இந்த பூகம்பத்தை தாங்காததற்கு காரணம் என 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பூகம்பத்தால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரை இழந்து வாடிவருகின்றனர்.

இடிபாடுகளுக்கு இடையில் பிறந்த குழந்தை, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது என கண்கலங்க வைக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று துருக்கிய கால்பந்து அணிகளான பேசிக்டாஸ் அணிக்கும் ஆண்டல்யாஸ்போர் அணிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடந்தது.

இப்போட்டியில், குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக ரசிகர்கள் பலரும் அவர்கள் எடுத்துவந்திருந்த டெடி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் வீசியெறிந்தனர்.

இதற்காக போட்டி பூகம்பம் தாக்கிய நேரமான 4.17 மணியை குறிக்கும் விதமாக 4 நிமிடம் 17 விநாடிகள் நிறுத்திவைக்கப்பட்டது. பல வண்ணங்களில், பல வடிவங்களில் ரசிகர்கள் தாங்கள் எடுத்துவந்திருந்த பொம்மைகளை மைதானத்திற்குள் எறிந்தனர்.

கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்?
துருக்கி - சிரியா : கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அச்சம் - அதிகாரிகள் கூறுவதென்ன?

இந்த முன்னெடுப்புக்கு திஸ் டாய் இஸ் மை பிரண்ட் (This Toy Is My Friend) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பொம்மைகளை பேசிக்டாஸ் அணி கால்பந்து வீரர்கள் சேகரித்துக்கொண்டனர். அவர்களது சார்பில் இந்த பொம்மைகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்றடையும். பொம்மைகளை தவிர குழந்தைகள் பயன்படுத்தும் இன்னும் சில பொருட்களையும் அவர்கள் மைதானத்திற்குள் எறிந்தனர்.

துருக்கி, சிரியா அரசாங்கம் இந்த பூகம்பத்திற்கு பொறுப்பெற்கவில்லை எனவும் பரவலாக குற்றச்சாட்டு இருப்பதாக சிஎன்என் செய்தி தளம் கூறுகிறது

கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை எறிந்த ரசிகர்கள் 4.17 நிமிடம் நின்ற போட்டி - ஏன்?
துருக்கி : 50,000 பேரை காவு வாங்கிய நிலநடுக்கம்; கட்டுமான பணியில் ஊழலா? 200 பேரை கைது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com